பக்கம்:மேனகா 1.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

282

மேனகா

தோன்றியது; புத்தி குழம்பியது; சிரம் கிருகிருவென்று சுழன்றது, நெருப்பாற்றில் நீந்தித் தத்தளிப்போரைப் போலாயினர். வைத்தியசாலையும், வராகசாமியும், அவனுடைய காயங்களும், கட்டுகளும் அவர்களுடைய நோக்கத்தினின்று - இந்திரஜாலமோவென்ன நொடியில் மறைந்தன. மாயாண்டிப் பிள்ளை மேனகாவுமே அவர்களது அகக்கண்ணாகிய நாடகமேடையில் தோன்றிக் கூத்தாடினர். தமது உடம்பையும் தாம் எங்கிருக்கிறோம் என்பதையும் மறந்து பதறிப்போய் அப்படியே தூண்களைப் போல நின்றுவிட்டனர். யார் என்ன சொல்லுவது என்பதை அறியாமல் சுவரில் தீட்டப்பட்ட சித்திரப் பதுமைகளைப் போல அசைவற்றிருந்தனர். அப்போது தாதியின் கீச்சுக்குரல் திரும்பவும் உண்டாயிற்று. “பதினைந்து நிமிஷம் முடிந்து போய்விட்டது; போகலாம்” என்ற சந்தோஷ சங்கதியை சிறிதும் மனங் கூசாமல் அவள் தெரிவித்தாள். அதற்குள் சாமாவையர், “அண்ணா! நாழிகையாய் விட்டதாம்; நாம் வெளியிற் போக வேண்டும்; கடிதங்களை முன்போல வைத்துவிடுவோம். துரையின் அனுமதி யில்லாமல் நாம் எதையும் எடுத்துக் கொண்டு போகக்கூடாது” என்றார். அதைக் கேட்ட சாம்பசிவம் கடிதங்களையும் படத்தையும் முன்போல உடைக்குள் வைத்துவிட்டு வெளியில் நடந்தார். அவருடைய நிழலைப்போலக் கனகம்மாளும் கூடவே சென்றாள். மூவரும் வைத்தியசாலைக்கு வெளியில் வந்தனர். அங்கு குதிரை வண்டியுடன் சாயப்பு தயாராக இருந்தான். வண்டியில் பூட்டப்பட்டு, விடுபடும் வழியறியாமல் தத்தளித்து நின்ற குதிரையும், சாம்பசிவம் கனகம்மாள் ஆகிய இருவருக்கும் நேர்ந்து வரும் பொல்லாங்குகளைக் கண்டு அழுவதைப்போலக் கண்ணீர் சொரிந்து தன் விதியை நினைத்து அழுதுகொண்டு நின்றது.

வெளியில் வந்தவுடன், சாம்பசிவம் வண்டிக்கருகில் நெருங்காமல் சற்று தூரத்திலேயே நின்றார். மற்ற இருவரும் வந்தனர். இரணியனது குடலைப் பிடுங்கி மாலையாய்த் தரித்துக்கொள்ளும் எண்ணத்துடன் மகா கோபத்தோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/300&oldid=1251391" இலிருந்து மீள்விக்கப்பட்டது