பக்கம்:மேனகா 1.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

284

மேனகா

செய்தே தீரவேண்டுமென்று உறுதியாக வெண்ணினார். ஆனால், அதற்குள் அவர் மனதில் இன்னொரு நினைவு உண்டாயிற்று. சென்ற பத்து மாதங்களாக தஞ்சையில் நாடகம் நடத்திய வீராசாமி நாயுடு கம்பெனியில் மனமோகன மாயாண்டிப் பிள்ளை யென்ற புகழ்பெற்ற ஒரு ராஜ வேஷக்காரன் இருந்ததாகவும், அவன் ஏராளமான குடும்ப ஸ்திரீகளைப் பைத்தியங்கொண்டலையும் படி செய்து அவர்களைக் கெடுத்துவிட்டான் என்றும், அந்தக் கம்பெனி சமீபகாலத்தில் சென்னைக்கு வந்தது என்றும் அவர் தஞ்சையிலேயே நாளடைவில் கேள்விப்பட்டிருந்தார். வீராச்சாமி நாயுடுவும் வருமானவரி போடும் விஷயமாக தமது கச்சேரியில் ஒருதரம் விசாரணைக்கு வந்ததாகவும் அவருக்கு நினைவுண்டாயிற்று. ஆகையால் உடனே நாடகக் கொட்டகைக்குப் போய், வீராசாமி நாயுடுவையாவது மாயாண்டிப்பிள்ளையையாவது கண்டு கடிதத்தில் எழுதப்பட்டிருப்பது பொய்யென்பதற்கு அவர்களுடைய சாட்சியமும் கிடைக்கும்படி தயார்படுத்தி விட்டுவந்து அதன் பிறகு போலீஸில் பதிவு செய்வதே பலமான முறையென்று நினைத்தார். சாமாவையரை நோக்கி, “சாமாவையரே! வீராச்சாமி நாயுடுவின் கம்பெனி எந்தக் கொட்டகையில் ஆடுகிறது?” என்றார் சாம்பசிவம். மாயாண்டிப் பிள்ளை இருந்த கம்பெனி விஷயத்தை அறிந்தவரைப்போலப் பேசியதைக் கண்டு திடுக்கிட்டு உள்ளூற நடுங்கினார். ஆனால் அதை வெளியிற் காட்டாமல் மறைத்துக்கொண்டு “செங்காங்கடைக் கோட்டையில் ஆடுகிறது” என்றார்.

“சரி, அங்கே போய்விட்டு வருவோம், வாரும்” என்றார் சாம்பசிவம். அவருடைய அந்தரங்க நினைவை உணராத கனகம்மாள் அவர் மேனகா வின் கற்பு விஷயத்தில் சந்ததேகப்படுகிறார் என்று நினைத்து அதைப் பொறாமல், “என்னடா இது? இந்தப் பொய்க் கடுதாசியை எடுத்துக்கொண்டு நாடகக் கொட்டகைக்குப் போக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/302&oldid=1251396" இலிருந்து மீள்விக்கப்பட்டது