பக்கம்:மேனகா 1.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திரிசங்கு சொர்க்கம்

285

வேண்டுமா? குட்டிச்சுவரில் முட்டிக்கொள்ள வெள்ளெ ழுத்தா? இந்த மொட்டை முண்டைகளே கட்டுக்கதை எழுதி வைத்துவிட்டு நீ இங்கே ரஜா இல்லாமல் வந்ததாக கலெக்டருக்கும் எழுதியிருக்கிறார்களடா! அங்கே எதற்காகப் போகிறது? அங்கே போய், “ஏனடா மாயாண்டிப் பிள்ளை! நீ என் பெண்ணை அழைத்துக்கொண்டு வந்துவிட்டாயா?” என்று கேட்கிறதா? அதெல்லாம் வேண்டாமப்பா! நீ பேசாமல் போலீஸில் எழுதி வை; முண்டைகள் தாமாக வழிக்கு வருகிறார்கள்” என்றாள்.

சாம்பசிவம் பணிவாக, “அம்மா! உண்மை யென்ன வென்பது எனக்குத் தெரியாதா? இருந்தாலும் கொட்டகைக்கு நாம் போவதில் கொஞ்சம் அனுகூலம் இருக்கிறது. நாம் போய்விட்டு வர ஒரு மணிநேரத்திற்கு மேலாகாது. அப்புறம் உடனே போலீஸில் பதிய வைப்போமே! போலீஸ் எங்கே ஓடப்போகிறது?” என்று மரியாதையாகக் கூற, கனகம்மாள், “அப்படியானால் வண்டியில் ஏறுங்கள்” என்றாள்.

உடனே மூவரும் வண்டியில் ஏறிக்கொண்டனர். வண்டியைச் செங்காக்கடைத் தெருவிற்கு விரைவாக ஒட்டும்படி சாமாவையர் வண்டிக்காரனுக்கு உத்தரவு பிறப்பித்தார். எப்போதும் சுறுசுறுப்பையும் துரிதத்தையுமன்றி சோர்ந்த நிலைமையைக் காட்டாத வண்டிக்கார பாச்சாமியான் சாயுபுவின் வாயில் “இதோ ஆச்சு ஸாமி” என்ற சொல்லே எப்போதும் தவறாமல் வந்தது. அதற்கிண்ங்க குதிரையின் சதங்கைகளும் ஜல் ஜல் ஜல்லென்று ஒசை செய்தன. அவற்றால் உட்புறம் இருந்தவர் வண்டி வேகமாகவே ஒட்டப்படுவதாக நினைத்துக்கொண்டு திருப்தியடைந்தனர். ஆனால், உண்மையில் முன்னிலும் விசைகுறைந்துகொண்டே வந்ததன்றி அதிகரிக்க வில்லை. தமயந்தியின் இரண்டாவது சுயம்வரத்திற்குப் போகும் பொருட்டு சாரத்தியம் செய்த நளமகராஜனைப்போல பாச்சாமியான் சாயப்பு கடிவாள வாரைக் கம்பீரமாக கையில் ஏந்தினான். வண்டி புறப் பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/303&oldid=1251398" இலிருந்து மீள்விக்கப்பட்டது