பக்கம்:மேனகா 1.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திரிசங்கு சொர்க்கம்

291


நாயுடு:- வேறு எதற்காக ஒடுகிறான்? எல்லாம் ஸ்திரீ விஷயந்தான். அவன் சும்மாவிருந்தாலும், நாடகம் பார்க்கவரும் பெண்டுகள் அவனை விடுகிறதில்லை. அவன் தஞ்சாவூரிலிருந்தபோது யாரோ ஒரு பெரிய மனிதருடைய பெண்ணைத் திருட்டுத்தனமாக வைத்துக்கொண்டிருந்தானாம். அவள் மகா அழகு சுந்தரியாம்; அவளுடம்பில் ஐயாயிர ரூபா நகை யிருந்ததாம். அங்கிருந்து நாங்கள் இங்கே வந்தபிறகு, அவளும் ஏதோ தந்திரம் செய்து, தன் பெற்றோர் புருஷன் முதலியோரை ஏமாற்றிவிட்டு, இவனிடம் வந்துவிட்டாளாம். அவளும், அவனும் எங்கேயோ இரகசியமாய் ஒடிப்போய் விட்டார்கள், ரெங்கூன் சிங்கப்பூர் முதலிய அக்கரை தேசங்களுக்குப் போய் அவர்கள் இருவரும் நாடகக் கம்பெனி ஏற்படுத்தி ஆடப்போகிறதாகக் கேள்விப்பட்டேன். அவன் போன தேதி முதல் எங்களுக்குத் துன்பந்தான்- என்றான்.

அதைக் கேட்ட சாம்பசிவம் கனகம்மாள் ஆகிய இருவரின் முகங்களும் மாறுதலடைந்தன. விஷயம், கிணறு வெட்ட பூதம் புறப்பட்டதைப்போல முடிந்ததைப் பற்றிக் பெரிதும் கலக்க மடைந்தனர். மேனகா தஞ்சையில் தமது வீட்டிலிருந்த ஒவ்வொரு நிமிஷமும் கனகம்மாளின் கண்ணில் பட்டுக்கொண்டே இருந்தாள் ஆதலின், இதில் சம்பந்தப் பட்டவள் மேனகா அன்றென்பது நிச்சயமாகத் தெரிந்ததா யினும் கடிதத்திற்கும், அந்த விவரத்திற்கும் ஒற்றுமை யிருப்பதால், ஒருக்கால் அவளே அவ்வாறு செய்திருப்பாளோ வென்னும் சந்தேகமும் அவர்களுடைய மனதில் அஞ்சி அஞ்சித் தலையைத் தூக்கியது. அவர்களுடைய குழப்பம், பெருங்குழப்பமாய், முற்றிலுங் குழப்பமாய் முடிந்தது.

நாயுடு:- பிராமண ஜாதியாம்!

சாம்ப:- வைஷ்ணவ ஜாதியா? ஸ்மார்த்த ஜாதியா?

நாயுடு:- அதை நான் கேட்கவில்லை. யாரோ ஒரு பெரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/309&oldid=1251408" இலிருந்து மீள்விக்கப்பட்டது