பக்கம்:மேனகா 1.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

மேனகா

வந்து விடும் என்று கண்டவன், பணத் தேவை உண்டான போதெல்லாம் அடித்துக் கொண்டுதான் இருப்பான்; நானும் பணத்தைச் செலுத்தி கொண்டேதான் இருக்க வேண்டும். பெண்ணை அடிப்பதில் அவர்களுக்கு இயற்கையிலேயே சந்தோஷம் அதிகம்; இன்னம் அது கஜானாவில் ‘செக்’ மாற்றுவதைப் போலானால் பிறகு அடிப்பதுதான் வக்கீல் உத்தியோகமாகச் செய்வான். சரி! அப்படியே ஆகட்டும். கடிதம் எழுதுகிறேன்-என்று காகிதத்தையும், இறகையும் கையில் எடுத்தார்.


❊ ❊ ❊ ❊ ❊

4-வது அதிகாரம்

மனதிற்குகந்த மன்மதன்

ராகசாமிக்கு வயது இருபத்திரண்டாயிற்று. அவன் நடுத்தரமான உயரமும், சிவந்த மேனியும், வசீகரமான வதனமும் பெற்றவன். அவன் தன் சிரசில் அரையணா வட்டத்திற் குடுமி வைத்திருந்தமையால், உரோமத்திற்குப் பதில் ஒரு எலியின் வாலே சிரசிலிருந்தது. அவனது தேகத்தில் சுறுசுறுப்பொன்றே காணப்பட்டதேயன்றி தசைப் பிடிப்பதென்பதே காணப்படவில்லை. அவன் மிக்க கூர்மையான புத்தியைப் பெற்றிருந்தும், அது ஏட்டுச்சுரக்காயேயன்றி, அவனுக்கு உலகத்தின் அநுபவம் சிறிதும் கிடையாது. அவன் குழந்தைப் பருவத்திலேயே தனது தந்தையை இழந்து, விதவையான தன் தாயினாலேயே வளர்க்கப்பட்டு வந்தான். போதாக்குறைக்கு இரண்டு சகோதரிமார்களும் விதவை நிலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/50&oldid=1252315" இலிருந்து மீள்விக்கப்பட்டது