பக்கம்:மேனகா 1.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

மேனகா

தன்னுடைய கலியானம் சாந்தி முகூர்த்தம் முதலியவற்றில் அவளுடைய தந்தை தனக்குத் தக்க மரியாதைகளும், சீரும் செய்யவில்லை யென்று சகோதரிமார் அவனிடம் அடிக்கடி உபதேசித்து வந்தனர். மேனகா குணத்தழகும், கல்வியழகும், மேனியழகும், நடத்தையழகும், வேலைத்திறமையும், புத்தி நுட்பமும் பெற்ற மாதர் திலகமாயிருந்தாள் ஆயினும், அவள் எவ்விதக் குற்றங் கூறுதற்கும் வழியின்றி ஒழுகி வந்தாள் ஆயினும், எவராலும் கோயிலில் வைத்து தெய்வமென வணங்கத்தகுந்த உத்தமியாயிருந்து வந்தாள் ஆயினும், அவர்கள் அவள் மீது பொய்க் குற்றங்களை நிர்மாணம் செய்து சுமத்தி ஒவ்வொரு நாளும் அடிவாங்கி வைப்பார்கள், அவனும் அவளும் ஐந்து நிமிஷமேனும் தனிமையிற் பேச விடமாட்டார்கள். அந்த மனைவியே தனக்குத் தேவையில்லை யென்று அவன் அவளை வெறுக்கும்படி செய்துவிட்டனர். அவளுடைய தந்தையின் மீதும் பகைமையை உண்டாக்கி வைத்தனர்.

பெருந்தேவி யம்மாள் அதுவரையிற் சேர்த்த பணத்தை யெல்லாம் 300 - பவுன்களாக மாற்றி அதை ஒரு சிறிய மூட்டையாகக் கட்டி, அம் மூட்டையைத் தன் இடையில் புடவைக்குள் வைத்துச்சுமந்து வந்தாள். அத்துடனே நீராட்டம், போஜனம், நித்திரை முதலிய யாவும் நடைபெற்றன. அந்த இரகசியத்தை எவரும் அறியவில்லை. சாமாவையருடைய கூரிய நாசி அதை எப்படியோ மோப்பம் பிடித்துவிட்டது. அவள் வீணிற் சுமந்திருந்த அந்தப் பளுவைத் தான் ஏற்றுக் கொண்டு அவளுக்கு உதவிபுரிய வேண்டும் என்பதே சாமாவையரின் அந்தரங்க நினைவு. அதற்காகவே அவர் அவர்களுடன் நட்புக்கொண்டு அன்னியோன்னியமாய்ப் பழகி வந்தார். அவள் ஊதியதற்குத் தகுந்தவாறு அவர் மத்தளந் தட்டி வந்தார்.

அவர் விதவைகளோடு தனிமையில் இருக்கையில், பெருந்தேவி சொல்வதே சரியென்பார். வராகசாமியோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/56&oldid=1248123" இலிருந்து மீள்விக்கப்பட்டது