பக்கம்:மேனகா 1.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

மேனகா

ஆழ்ந்திருந்தாள் ஆனாலும், அவளுடைய கை மாத்திரம் அவனை வருடியவண்ணம் இருந்தது. அந்தக் கரத்தைப் பிடித்துப் பார்த்த வராகசாமி, “ஆகா! இரக்கமற்ற பாவியாகிய நான் சுட்ட வடுவல்லவா இது! அடி மேனகா! இவ்வளவு கொடுமை செய்த துஷ்டனாகிய என்னைக் கொஞ்சமும் வெறுக்காமல் நீ எவ்வளவு அதிகமாக விரும்புகிறாய்! சுகத்தைக் கருதிய பெண்கள் தமது கணவரிடம் வாஞ்சையை வைக்கின்றனர். ஓயாத் துன்பத்தை அநுபவித்தும், நீ என்னுடன் இருப்பதை விரும்புகிறாய்! ஆகா! காதலின் மகிமையை என்ன வென்று சொல்வது! சூட்டைப் பெற்ற உன் கை என்னை வருடி எனக்கு இன்பம் கொடுப்பதைக் காண்பதே எனக்குப் போதுமான தண்டனையாய் விட்டது. நடந்தவற்றை நினைக்க என் மனம் பதறுகிறது. இப்போது நான் அநுபவிக்கும் மனவேதனையைப் போல நான் என் ஆயுசு காலத்தில் அநுபவித்ததும் இல்லை; இனி அநுபவிக்கப் போவதும் இல்லை” என்றான். அந்தரங்கமான அன்போடு மொழிந்த சொற்கள் பசுமரத்து ஆணிபோல மேனகாவின் மனதிற் புகுந்தன. அதுவரையில் அவள் அனுபவித்த எண்ணிறந்த துன்பங்களின் நினைவு முற்றிலும் அவளுடைய மனதைவிட்டு அறவே ஒழிந்தது. நிகழ்ந்தவை யாவும் கனவாகத் தோன்றின. பூரித்துப் புளகாங்கிதம் அடைந்தாள்; மனவெழுச்சிப் பெருக்கால் பொருமினாள். ஆந்தக் கண்ணிர் அருவிபோலப் பொங்கி வழிந்து ஆடைகளை நனைத்தது. அதுவரையிற் கண்டும் கேட்டும் அறியாவாறு அவன் அன்று தன்னிடம் அணைவாகவும் உருக்கமாகவும் அந்தரங்க அன்போடும் தன்னை கனப்படுத்தி மொழிந்ததைக் கண்ட மேனகா இன்ப சாகரத்தில் ஆழ்ந்து அவனுடைய ஆலிங்கனத்திலிருந்து தன்னை விடாமல் நன்றாக இறுகக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். ஆகா! இவ்வளவு ஆழ்ந்த பிரியத்தை என்மேல் வைத்துள்ள உங்களை விட்டு நான் என் உயிரை யொழிக்க முயன்றேனே! அந்த விஷயத்தில் நான் பெருத்த அபராதியானேன். நீங்கள் என் பிழைகளையெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/70&oldid=1248137" இலிருந்து மீள்விக்கப்பட்டது