பக்கம்:மேனகா 1.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாய்வதன் முன் பதுங்குதல்

53

இன்றோடு மன்னித்து விடவேண்டும். இனி என்னுடைய நடத்தையால் உங்களுடைய முழுப் பிரியத்தையும் சம்பாதித்துக் கொள்ளும் விதத்தில் நான் நடக்கிறேன். இனி நீங்கள் அடித்தாலும், வைதாலும், சுட்டாலும் என் தகப்பனாருடைய வீட்டைக் கனவிலும் நினைக்கமாட்டேன். நான் இறந்தாலும் உங்கள் பாதத்தடியிலேயே இறக்கிறேன்” என்றாள்.

வரா:- எவ்வளவோ செல்வத்தில் இருக்கும் டிப்டி கலெக்டருடைய ஒரே பெண்ணான நீ அடக்க ஒடுக்கம், பணிவு, பொறுமை முதலிய அரிய குணங்களுக்கு இருப்பிடமா யிருக்கிறாயே! ஆகா! நான் எவ்வளவுதான் தேடி அலைந்தாலும் உன்னைப் போன்ற நற்குணமுள்ள பெண்மணியை நான் ஒரு நாளும் காணமாட்டேன்- என்றான்.

இவ்வாறு அவ்விரு யெளவனப் பருவத்தினரும், அவ்வொரு வருஷத்தில் நிகழ்ந்த விஷயங்களைப் பற்றி பேசியவண்ணம் அதிகக் கிளர்ச்சி அடைந்து மாறி மாறி ஒருவரை யொருவர் புகழ்வதும், மகிழ்வதும், மொழிவதும், அழுவதுமாய்த் தெவிட்டாத இன்பம் அநுபவித்திருந்தனர். அது இரவென்பதும், தாம் துயில வேண்டுமென்பதும் அவர்களுடைய நினைவிற்கே தோன்றவில்லை. அவ்வாறு அன்றிரவு முழுவதும் கழிந்தது. அவர்களுடைய ஆசையும் ஆவலும் ஒரு சிறிதும் தணிவடையவில்லை. மற்றவர் எழுந்து இறங்கி யதையும், சூரியன் மிக்க உயரத்திற் கிளம்பிவிட்டதையும் உணர்ந்த பிறகு, ஒருவாறு அச்சங்கொண்டு அவர்கள் வெளியில் வந்தனர். அவ்விரவு கால் நாழிகை நேரத்தைப் போலக் கழிந்து போனதைக் காண அவர்கள் ஏக்கம் கொண்டனர்.

விசனத்தின் சுமையால் தனது உடம்பின் சுறுசுறுப்பை இழந்து மிகவும் தளர்வடைந்து தோன்றிய மேனகா அன்று புதுப்பெண்ணாக மாறிவிட்டாள். அவளுடைய தேகம் பளுவற்று இலேசாய்த் தோன்றியது. சந்தோஷத்தால் அவளுடைய உள்ளமும், தேகமும் பூரித்தன. வதனத்திற் புதிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/71&oldid=1248138" இலிருந்து மீள்விக்கப்பட்டது