பக்கம்:மேனகா 1.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாய்வதன் முன் பதுங்குதல்

55

ஆறாம்நாள் ஒரு பெருத்த கொலைக்கேசின் பொருட்டு வராகசாமி சேலத்திற்குப் போக நேர்ந்தது. அவன் எந்த வக்கீலின் கீழ் வேலை செய்து வந்தானோ அவருடன் அவனும் அவசியம் போகவேண்டியதாயிற்று. அதை முன்னாலேயே அறிந்திருந்த அம்மூன்று சதிகாரரும், அன்றிரவே தமது காரியத்தை நிறைவேற்றி விடத் தீர்மானித்தனர். ஆறாம் நாள் வராகசாமி உணவருந்தி எட்டு மணிவண்டிக்குப் புறப்பட ஆயத்தமானான். வீட்டை விடுத்து வெளிப்படுமுன் அவன் மேனகாவுடன் தனிமையில் தனது சயன அறைக்குள் சென்று “மேனகா! இந்த ஐந்து நாட்களாய் ஒரு நிமிஷமும் பிரியாதிருந்தோம். இப்போது உன்னை விட்டுப் போக மனமே இல்லை. ஏதோ என் மனசில் ஒரு வித சஞ்சலம் தோன்றி வதைக்கிறது. காலெழவில்லை. மனசும் சகிக்க வில்லை. என்ன செய்வேன்!” என்று கண்கலங்க மனதிளக உருக்கமாக நைந்து கூறினான். மேனகா கண்ணீர் விடுத்து விம்மி விம்மி அழுது தனது முகத்தை அவனது மார்பில் புதைத்து, “அங்கே எத்தனை நாள் இருக்க வேண்டும்?” எனறாள்.

வரா:- வேலையெல்லாம் அநேகமாய் நாளைக்கு முடிந்து போம். நாளை நின்று மறுதினம் காலையில் அவசியம் வந்துவிடுவேன். நீ அதுவரையில் மனசைத் தேற்றிக்கொண்டு கவலைப்படாமலிரு - என்று கூறி அவளை இழுத்து இறுகத் தழுவி முத்தமிட்டுக் கண்ணிரைத் துடைத்து விட்டான். அவனுடைய ஆலிங்கனத்திலிருந்து விடுபட மனமற்றவளாய் அவனை இறுகப் பிடித்துக் கொண்டு, “இன்றிரவு! நாளைப் பகல்! நாளையிரவு! அவ்வளவு காலம் நீங்கள் இல்லாமல் எப்படிக் கழியும்? நானும் கூட வந்தால் என்ன?” என்று கொஞ்சிய மொழியாற் கூறினாள். “ஒரு நாளைக்காக இங்கிருந்து அழைத்துப் போய் உன்னை அங்கே வைப்பதற்கு நல்ல வசதியான இடம் அகப்படாது. நீ பெரிதும் வருந்த வேண்டி வரும்” என்றான் வராகசாமி.

மேனகா, “ஆண்பிள்ளைக ளெல்லாம் மகா பொல்லா தவர்கள். அவ்வளவு பெரிய ஊரில் ஒரு பெண்பிள்ளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/73&oldid=1248700" இலிருந்து மீள்விக்கப்பட்டது