பக்கம்:மேனகா 1.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாய்வதன் முன் பதுங்குதல்

59

அவனை விடுத்து நகர்ந்து அவன் போவதற்கு இடையூறின்றி விலகி நின்றாள்.

அடுத்த நிமிஷம் வராகசாமி வெளியில் வர, அவனும் சாமாவையரும் வண்டியில் ஏறிக் கொண்டனர். வண்டி புறப்பட்டு சென்டிரல் ஸ்டேஷனை நோக்கிச் சென்றது.


❊ ❊ ❊ ❊ ❊


ரவு ஒன்பது மணியாயிற்று. ஒரு பெட்டி வண்டியில் வந்து வாசலில் இறங்கிய சாமாவையர் பெருந்தேவியைக் கூவியழைத்துக் கொண்டே உட்புறம் நுழைந்தார்.

பெருந்தேவியம்மாள், “ஏனடா! வண்டி அகப்பட்டதா?” என்றாள்.

தனது கணவன் திரும்பி வந்துவிடக்கூடாதா வென்று நினைத்து இன்பக் கனவு கண்டுகொண்டே இருந்த மேனகா சாமாவையருடைய குரலைக் கேட்டுக் கதவடியில் மறைந்து நின்று அவருடைய சொற்களைக் கவனித்தாள். கோமளம் ஒரு மூலையில் படுத்துப் பொய்த் துயிலி லிருந்தாள்.

சாமா:- நீங்களெல்லோரும் சாப்பிட்டு விட்டீர்களா?- என்றார்.

பெரு:- ஆய்விட்டது; என்ன விசேஷம் ? என்றாள்.

சாமா:- சரி அப்படியானால் புறப்படுங்கள். கேஸை வேறு தேதிக்கு மாற்றி விட்டதாகத் தந்தி வந்து விட்டது. வராகசாமி போகவில்லை. வி.பி.ஹாலில் இன்றைக்கு, “சகுந்தலா” நாடகம், வராகசாமி உங்கள் மூவரையும் அழைத்துவரச் சொன்னான்-என்றார்.


❊ ❊ ❊ ❊ ❊
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/77&oldid=1248736" இலிருந்து மீள்விக்கப்பட்டது