பக்கம்:மேனகா 1.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கும்பிடும் கள்ளன்

77

ஆசையில்லை. அவருடைய மனது பொதுவாக ஆண்பாலரிடம் அருவருப்பையும் பெண்பால்ரிடம் விருப்பையும் கொண்டது. கால் முதல் தலை வரையில் வைரங்களையும், பட்டாடை களையும் அணிந்து எழிலை ஏந்தி பூங்கொம்பு போல இருப்பவளும், லட்டு, ஜிலேபி, ஹல்வா முதலியனவே எனக் கண்டோர் வாயில் தேனூறும் வண்ணம் இனிமைத் திரளாகத் தோன்றும் மயிலியலாளுமான அவரது மனையாட்டியின் மீது அவருக்கு முற்றிலும் வெறுப்பு: மூன்றுகாததுரம் முடைநாற்றம் கமழும் தலையாரி எல்லப்பனுடைய தலைகாய்ந்த மனைவி முளியம்மாளின் மீதே அவருடைய காதலும் கண்ணோக்கமும் பிடிவாதமாகச் சென்றன. வெளியூர்களில் சுற்றுப் பிரயாணம் வரும் தாசில்தார்களெல்லோரும் ஊருக்குள் ஆண்பாலார் இருக்குமிடத்தில் முகாம் செய்வர்; தாந்தோனிராயரோ, அவ்வூர் மகளிர் தண்ணீரெடுக்கவும், நீராடவும் வரும் குளம், ஆற்றுத்துறைகள், கிணறுகள் முதலியவற்றிற்கு அருகிலேதான் கச்சேரி செய்வது வழக்கம். உலகில் பிறர் யாவரும் அவரிடம் உண்மை யொன்றையே பேசுதல் வேண்டும்; நல்லொழுக்கம், நற்குணம் முதலியவற்றை உடையவராயிருத்தல் வேண்டும்; ஆனால், அந்த விதி அவரை மாத்திரம் கட்டுப்படுத்தாது, பிறர் எவரும் எத்தகைய சுகத்தையும் அநுபவித்தல் கூடாது; அதற்குப் பிறந்தவர் அவர் ஒருவரே. அவருடைய மேலதிகாரிகள் எதைக்குறித்தும் அவரைக் கண்டித்தலும், அவர் மீது குற்றங் கூறுதலும் தவறு; அவர் தமக்குக் கீழிருந்தோரை மாத்திரம் நினைத்த விதம் பேசலாம்; எண்ணிய விதம் ஏசலாம்.

அதுகாறும் அவர் பெரிய கலெக்டர் கச்சேரியில் சிரஸ்தார் உத்தியோகத்தில் இருந்து மகா பயங்கரமான பிளேக் நோயைப் போலத் தம்மை நடுங்கும்படி அந்த ஜில்லாவில் எல்லோரையும் ஆட்டி வந்தவர். கட்டை விரல் பருமனிருந்த அகஸ்தியர் தமது வயிற்றில் எட்டாவது கடலுக்கும் இடமிருக்கிறதே, கடலில்லையே என்று ஏங்கினாராம். அதைப் போல் எத்தனையோ கலெக்டர்களை விழுங்கிய தமது சொக்காப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/95&oldid=1251014" இலிருந்து மீள்விக்கப்பட்டது