பக்கம்:மேனகா 2.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முற்றும் நனைந்தவர்க்கு ஈரமுண்டோ?

123

நோக்கிய விழியுமாக துயரமே வடிவெடுத்ததைப்போல அசைவற்று இருவரும் தொட்டிலிற் கருகில் உட்கார்ந்திருந் தனர்.

தங்கம்மாள் உயிருடனிருப்பவள் போலத் தோன்ற வில்லை. கண்கள் மூடப்பட்டே இருந்தன. எவ்வித அசைவும் மூச்சும் தோன்றவில்லை. அதைக் கண்டு பெரிதும் அஞ்சிய கனகம்மாள் அப்போதைக்கப்போது தங்கம்மாளின் மார்பில் கையைவைத்து ஹிருதயம் அடித்துக் கொள்ளுகிறதோ வென்பதைப் பார்த்தாள். உடம்பில் சூடு சிறிது புலப்பட்டது. பிறகு கனகம்மாள் கைபிடித்து நாடி பார்த்தாள். நிற்கப்போகும் கடியாரத்தைப்போல, நாடி நெடுநேரத்திற் கொருதரம் மெல்ல அடித்துக்கொண்டது. உயிரிருப்பதாக நினைத்து இருவரும் ஒரு சிறிது துணிவடைந்தனர்.

அவர்கள் ரயிலில் அவ்வாறு இருக்க, சாம்பசிவத்தின் மறு மொழிக் கடிதத்தை எடுத்துச் சென்ற சேவகன், அதை பெரிய கலெக்டர் துரையிடம் சேர்த்தான். துரை கடிதத்தை வாங்கிப் படித்துப் பார்த்து மிகவும் ஆச்சரியமடைந்தார்; குற்றப் பத்திரிகையிற் கண்ட மூன்றாவது குற்றத்திற்கு டிப்டி கலெக்டர் எழுதியிருந்த சமாதானத்தை இன்னொரு முறை படித்தார். முந்திய நாள் தாம் ரஜா கொடுக்க மறுத்த பிறகு சாம்பசிவம் திரும்ப ஒரு மனு எழுதி தாந்தோனிராயரிடம் கொடுத்ததாகவும், அதை எடுத்து வந்த ராயர், ரஜா கிடைத்து விட்டதாகச் சொல்லியனுப்பினதாகவும் சாம்பசிவம் எழுதியிருந்த விஷயம் துரையின் மனதைக் கலக்கியது. ஒரு கால் அது உண்மையா யிருக்குமோ வென்று அவர் சந்தேகித்தார். அப்படி இருந்தால் ரஜா கொடுக்கப்பட்டதாக தாந்தோனிராயர் பொய்யான செய்தி சொல்லி செய்தி யனுப்ப முகாந்தரமென்ன வென்று யோசித்தார். தாந்தோனிராயர் சாம்பசிவத்தின்மீது கொண்ட அருவருப்பினால் ஒருகால் அவ்வாறு செய்திருப்பாரோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/124&oldid=1252006" இலிருந்து மீள்விக்கப்பட்டது