பக்கம்:மேனகா 2.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

மேனகா

என்றும் நினைத்தார். உடனே தாந்தோனியை வரவழைத்து உண்மையை அறிந்து கொள்வதே நல்லதென்று நினைத்து, அவரை உடனே அழைத்து வரும்படி துரை சேவகனை அனுப்பினார். சாலியமங்கலத்திலிருந்து அப்போதே வீட்டிற்கு வந்த ராயர் டிப்டி கலெக்டருடைய சங்கதிகளை தமது சேவகர்களிடம் கேட்டு அறிந்து கொண்டார். சாம்பசிவம் தங்கம்மாளை சென்னைக்கு அழைத்துச் சென்றது முதலிய செய்தியனைத்தையும் உணர்ந்து, “இன்றோடு ஒழிந்தான் சனியன்” என்று உல்லாசமாக அவர் தமது சாய்மான நாற்காலியிற் படுத்தார். அப்போது கலெக்டருடைய சேவகன் வந்து துரை அழைத்துவரச் சொன்னதாகக் கூறினான். என்ன சம்பவித்ததோ, எந்த ரகசியம் வெளியானதோ என்று சந்தேகித்துக் கலங்கிய ராயர், உடனே எழுந்து உத்தியோக உடைகளையணிந்து கொண்டு, ஓடோடியும் சென்று பங்களாவை யடைந்து குனிந்து துரைக்கு சலாம் செய்தார். துரை உடனே சாம்பசிவத்தின் சமாதானத்தின்மேல் தமக்குண்டான சந்தேகத்தை தெரிவிக்க, ராயர் மிகவும் வியப்படைந்தவரைப்போல காண்பித்து, “அடாடா! இது முழுப் புரட்டாயிருக்கிறதே! நானாவது மனுவை வாங்கி வரவாவது, ரஜா கொடுக்கவில்லை யென்று அவரும் அவருடைய தாயாரும் தங்களை மிகவும் இழிவாகப் பேசினார்கள். சர்க்கியூட் போவதாகச் சொல்லிவிட்டு பட்டணம் போகப் போகிறோ மென்று சொன்னார்கள். எனக்கு அங்கே இருக்கப் பிடிக்கவில்லை; நான் எழுந்து நேராக தங்களிடம் வந்துவிட்டேன். பிறகு நாம் இருவரும் ரயிலடிக்குப் போய், அவர்கள் பட்டணத்துக்குப் போனதைப் பார்த்தோம். ரஜா கொடுக்கப்பட்ட தென்று அவருக்கு நான் சொல்லி யனுப்ப எனக்குச் சாவகாசமேது? தாங்கள் ரஜா கொடுக்க மறுத்ததை நான் அறிந்தவன். அப்படி இருக்க, மறுபடியும், அவர் மனுக் கொடுத்தால், அதை வாங்கிக்கொண்டுவர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/125&oldid=1252007" இலிருந்து மீள்விக்கப்பட்டது