பக்கம்:மேனகா 2.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேம்போ கரும்போ

145

குணமடைவோரினும், இத்தகைய அணங்குகளின் மனமார்ந்த உபசரணையினால் குணமடைபவரே பெரும்பாலாரென மதித்தல் வேண்டும்.

இத்தகைய அறையொன்றில் விடிப்பட்டிருந்த வராகசாமி உயிருட னிருக்கிறானோ, அல்லது உயிர் துறந்து விட்டானோ வென்று ஐயுறத் தகுந்த நிலைமையில் கட்டிலொன்றில் படுத்திருந்தான். அவனது உடம்பில் ஏராளமான காயங்கள் நிறைந்திருந்தன. சாம்பசிவம், கனகம்மாள், சாமாவையர் ஆகிய மூவரும் வந்து அவனைப் பார்த்து விட்டுச் சென்றபிறகு, அவன் கட்டிலோடு தனிமையான வேறோர் அறைக்கு நகர்த்தப்பட்டான். அவ்விடத்தில், அவனது முழங்காலில் முறிபட்டுப் போயிருந்த எலும்பு சரியாக வைத்துக் கட்டப் பட்டது. அந்த நிலைமையில் அவனை மேலும் அலட்டுதல் கூடாதென நினைத்த டாக்டர், அவனை அவ்விடத்திலேயே தனிமையில் விடுத்திருந்தார். அவன் கண்களைத் திறவாமலும், அசையாமலும் அவ்வாறே இரவு பகலாய் உணர்வற்றுப் படுத்திருந்தான். அவன் இனி பிழைக்கமாட்டா னென்பதும், பிழைத்தால் அது தெய்வச் செயலென்பதும் பெரிய துரையின் அபிப்பிராயம். பெரியதம்பி மரக்காயரது பங்களாவில் நோய் கொண்டு படுத்திருந்த மேனகா வென்னும் பெண்ணின் கணவனே அவனென்பதை அறிந்த பிறகு டாக்டர் துரைஸானி, அவனிடம் பெரிதும் இரக்கங்கொண்டு அவனது விஷயங்களை மிகுந்த அபிமானத்தோடு பார்த்து வந்தாள். டாக்டர் துரையினிடத்தில் அவனது குடும்ப விஷயங்களை யெல்லாம் கூறி, அவனுக்கு எண்ணிறந்த வசதிகளையும் ஏற்பாடுகளையும் செய்வித்தாள்; மிகவும் விலையுயர்ந்த மருந்துகளைப் பிரயோகிக்கும்படி செய்தாள்; தனிமையிலிருந்த அறையிலேயே அவர்கள் அவனைச் சந்தடியும், சலனமுமின்றி, சுகமாக விடுவித்து வைத்தனர். அவனுக்குரிய பணிவிடைகளைச் செய்யவும், இரவு

மே.கா.II-10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/146&oldid=1252155" இலிருந்து மீள்விக்கப்பட்டது