பக்கம்:மேனகா 2.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேம்போ கரும்போ

147

திறமையான மருந்துகள் அவனது புண்களைச் சிறுகச்சிறுக ஆற்றிக்கொண்டுவந்தன; உடம்பில் முற்றிலும் ஓய்ந்து போயிருந்த இரத்த ஊற்றையும் ஊக்கிப் பெருக்கின. சீர் குலைந்து கிடந்த மூளையும் அறிவும் சிறிது செவ்வைப்பட்டன. அவனும், தனது உணர்வைப் பெற்று கண்களைத் திறந்து நாற்புறங்களையும் நோக்கினான். மின்சார விளக்கின் வெளிச்சம் பளிச்சென்று பிரகாசித்துக் கண்ணைப் பறித்தது. அதைத் தாங்கமாட்டாமல் அவனது கண்கள் சோர்வடைந்து உடனே மூடிக்கொண்டன. தான் நோய் கொண்டு ஏதோ ஒர் அறையில் கட்டிலில் படுத்திருப்பதாக அவன் நினைத்தான்; அவ்வாறு சிறிது நேரம் கழிந்தது. தனது நினைவு அப்போது நன்றாக உண்டாயிற்று. தான் கடற்கரையில் மேனகாவைக் கொல்ல முயன்றதும், அப்போது தான் கீழே விழுந்து மோட்டார் வண்டியில் அறைபட்டதும் நினைவிற்கு வந்தன. தனது கட்டிலிற் கருகில் யாரோ ஒருவர் உட்கார்ந் திருப்பதாகவும், அவர் பல நாட்களாக அருகிலிருந்து தனக்கு இன்பமுண்டாக்கி வருவதாகவும் அவனது மனதில் கனவைப்போன்ற ஒர் எண்ணம் உண்டாயிற்று. அத்தகைய பேருபகாரி யாவர் என்பதை அறிய நினைத்து, அவன் தனது கண்களை இன்னொரு முறை திறந்து அவரிருந்த பக்கத்தில் நோக்கினான். கட்டிலினருகில் போடப்பட்டிருந்த நாற்காலி யொன்றில் தொப்பி முதலியவற்றை யணிந்த ஒர் அழகிய வெள்ளைக்கார பெண் மயிலாள் மிகவும் கவலைகொண்ட முகத்தோடு உட்கார்ந்திருக்கக் கண்டான். அந்தப் பெண் அவன் மனதில் எழும் நினைவை வெளியிடாமுன்னரே ஞான திருஷ்டியால் அதையுணர்ந்து அவனுக்குத் தேவையான வற்றைச் செய்ய ஆயத்தமா யிருப்பவளாய்க் காணப்பட்டாள். அவளது முகம் கபடமற்றதும் நிரம்ப வசீகரமானதுமாய்க் காணப்பட்டது. எனினும், பல நாட்களாக இரவு பகல் காத்திருப்பதனால் அவளது முகம் வாட்டமடைந்திருப்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/148&oldid=1252160" இலிருந்து மீள்விக்கப்பட்டது