பக்கம்:மேனகா 2.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

மேனகா

காட்டுகிறார்களாம்! வேஷக்காரர் கள்! பெண்களே, வெளிப்பகட்டு வடிவம்; அதிலும் வெள்ளைக் காரப் பெண்களோ சாகசத்தில் கைதேர்ந்து முதற்பட்டம் பெற்ற கபட நாடக வேஷங்கள். நான் யாரோ அன்னியன்; என்னை முன்பின் அறியாதவளான இவள், ஆயிரம் வருஷகாலம் பழகியதாய், மனைவி முதலியோரைப்போல வித்தியாசமின்றி அருகில் வந்து தடவிக் கொடுக்கிறாளே! இந்த வைத்திய சாலையில் தினம் ஒவ்வொருவனுக்கு இப்படித் தடவிக் கொடுத்து இவளுடைய அன்பு ஆதாரங்களையெல்லாம் செலவழித்து விட்டு வீட்டுக்குச் செல்வாளாயின் அதன்பிறகு கணவனிடம், இவள் எவ்வளவு அன்பைக் காட்டப்போகிறாள். அவனுடன் சந்தோஷமாக ஒரு வார்த்தை பேசத்தான் இவளுக்குப் பொறுமை இருக்குமா! ஆகா! இவளைப் பெண்டாட்டியாக அடைபவன் வாழ்ந்துபோவான்!” என்று பல்வேறு நினைத்து அந்தப் பெண்ணைத் தன் மனதிற்குள் இகழ்ந்தவண்ணம் அவன் துயிலில் ஆழ்ந்தான். அதன்பிறகு இரண்டொரு நாழிகை நேரம் கழிந்தபின் அவன் விழித்துக்கொண்டு கண்களைத் திறப்பான். ஜெகஜ் ஜோதியைப்போலத் தன்னை விட்டு அகலாமல் அறையிலிருந்த அந்த வெள்ளை மடமயிலை அவன் ஒரு பெருத்த பூச்சாண்டியாக மதித்து அவளைப் பார்க்கவே அஞ்சினான். அவளிருந்த பக்கம் நோக்கவும் அவனது கண்கள் கூசின; உடனே கண்களை மூடுவான்; பழைய நினைவுகள் புற்றிலிருந்து எழும் ஈசல்களைப்போல மனதில் எழுந்தன; தனது மனைவியின் விபச்சாரச் செயல்களும், மாயாண்டிப் பிள்ளையின் காதற் கடிதங்க ளிலுள்ள சொற்களும் அகக்கண்ணின் முன்னர் தோன்றி நின்று தாண்டவமாடின, அந்த நினைவுகளைத் தாங்கமாட்டாமல் அவன் மயங்கி உணர்வற்று வீழ்ந்து விடுவான்; காம்பொடிபட்ட மலரென அவனது சிரம் வாட்டமுற்று தலையணையில் சாய்ந்து கிடக்கும். அந்த மடந்தை மாறிமாறி மருந்துகளையும், பாலையும் செலுத்தி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/151&oldid=1252166" இலிருந்து மீள்விக்கப்பட்டது