பக்கம்:மேனகா 2.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேம்போ கரும்போ

157

வேறு எதையோ கவனிப்பவள்போல இருந்து விட்டு மறுபடியும் முகத்தை அலட்சியமாக அவனது பக்கம் திருப்பி, “அவர்களுக்கு என்னென்னவோ ஆபத்துக்கள் வந்து விட்டனவாம். ஆகையால், அவர்கள் உடனே ஊருக்குப் போய்விட்டார்களாம். சாமாவையர் என்பவர், டாக்டர் துரைஸானியம்மாளிடம் சொன்னாராம்?” என்றாள். அதைக் கேட்ட வராகசாமி திகைப்படைந்து, “அவர்களுக்கு என்ன ஆபத்து வந்ததாம்? அந்த விவரத்தை சாமாவையர் சொல்லவில்லையா?” என்று பரிகாசமாகக் கேட்டான்.

வெள்ளை:- எல்லா வற்றையும் சொன்னாராம். அவர்கள் உங்களைப் பார்க்க இங்கே வரும்போது வழியில் போலீஸார் உங்கள் மாமனாரை ஸ்டேஷனுக்குள் அழைத்துப்போய், அவரை தஞ்சை கலெக்டர், வேலையிலிருந்து விலக்கி வைத்திருக்கிறதாக அனுப்பி யிருந்த தந்தி உத்தரவைக் கொடுத்தார்களாம்.

வராக:- (அதிக வியப்படைந்து) என்ன ஆச்சரியம் ஏன் அவரை வேலையிலிருந்து நீக்கினார்களாம்?

வெள்ளை:- அவர் ரஜா இல்லாமல் இந்த ஊருக்கு வந்து தம்முடைய பெண்ணை யழைத்துக்கொண்டு போனாராம். அதற்காகவும் இன்னம் ஏதோ காரணத்துக்காகவும் வேலையிலிருந்து நீக்கினார்களாம் - என்றாள்.

அதைக்கேட்ட வராகசாமி மிகவும் ஆச்சரியமடைந்தான். மாமனார் சென்னைக்கு வந்து பெண்ணையழைத்துப் போனாரென்பதே பொய்; அம்மாதிரி தானும் , தனது சகோதரிமாரும், சாமாவையரும் நினைத்திருந்தவர்கள். மாயாண்டிப்பிள்ளையின் கடிதங்கள் கிடைத்த பிறகு அந்த எண்ணம் விலகிவிட்டது. அப்படி இருக்க, அவர் சென்னைக்கு வந்தார் என்னும் பொய்யான அவதூறு தஞ்சை கலெக்டருக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/158&oldid=1252173" இலிருந்து மீள்விக்கப்பட்டது