பக்கம்:மேனகா 2.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

மேனகா

எப்படி எட்டி யிருக்கும் என்று அவன் யோசித்துப் பார்த்தான்; தான் அனுப்பிய தந்தி ஒருக்கால் கலெக்டரிடம் போய்ச் சேர்ந்திருக்குமோ வென்று நினைத்தான். வேறு எத்தகைய காரணமும் தோன்றாமையால், விஷயம் அப்படித்தானிருக்க வேண்டு மென்றே அவன் உறுதியாக நினைத்து, இரண்டொரு நிமிஷம் மெளனம் சாதித்தான்; “அப்புறம் இன்னம் என்ன ஆபத்து வந்ததாம்?” என்று கேட்டான்.

வெள்ளை:- அவர்கள் தஞ்சையிலிருந்து புறப்பட்ட அன்று ராத்திரி, அவர்களுடைய வீட்டில் கொள்ளைக்காரர்கள் புகுந்து, சொத்துக்களை யெல்லாம் கொண்டுபோனது மன்றி, உங்களுடைய மாமியாரை மிகவும் முரட்டுத்தனமாக அடித்துப் போய்விட்டார்களாம். அந்தச் செய்தியும் உடனே தந்தியின் மூலமாகக் கிடைத்ததாம். உங்கள் மாமியார் பிழைக்க மாட்டார்களென்றே செய்தியைக் கேட்டு உடனே அவர்கள் போய்விட்டார்களாம் - என்றாள்.

அந்த மகா துக்ககரமான விஷயத்தைச் சொல்ல மாட்டாமல், தயாள குணமுள்ள அந்த வெள்ளைக்காரப் பெண் மிகவும் வருந்திக் கூறினாள். அவளது கண்களிலும் கண்ணீர் துளித்தது. அவள் அப்புறம் திரும்பி அதைத் துடைத்துக் கொண்டாள். அந்த விவரத்தைக் கேட்ட வராகசாமியின் மனம் ஒருவாறு கலங்கியது. அறிவும் சோர்வடைந்தது. அவன் உடனே தனது கண்களை மூடிக்கொண்டு கால்நாழிகை நேரம் உறங்கியபின் விழித்துக் கொண்டான். அப்போது அவனுக்கு மருந்தும் பாலும் கொடுக்க வேண்டிய தருணம் வந்தமையால், பணிமகள் மிகவும் அன்போடு மருந்தை உட்செலுத்தினாள். அம்மருந்து வயிற்றைப் புறட்டிய தாகையால், அவன் வாந்தி யெடுக்க முயன்றான். அவள் அனுக்கருகில் கட்டிலில் உட்கார்ந்துகொண்டு, “வாந்தி எடுக்கவேண்டாம். சமாளித்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லிக்கொண்டு அவனது மார்பைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/159&oldid=1252174" இலிருந்து மீள்விக்கப்பட்டது