பக்கம்:மேனகா 2.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

மேனகா

கெட்டுப்போயிருக்கிறது. அவிந்து போகும்போது விளக்குச் சுடர் துடிப்பதைப் போல இவளுடைய நாடி இப்போது மிகவும் கேவலமாக இருக்கிறது: இனியாவது இரண்டொரு நாளைக்கு இவளிடம் அதிகமாகப் பேசவேண்டாம்; இப்போது மிகவும் அருமையான ஒரு மருந்துக்கு சீட்டெழுதிக் கொடுக்கிறேன்; அதை உடனே வரவழைத்துக் கொடுங்கள்; விரைவில் தெளிவடைந்துவிடுவாள். இன்று மாலையில் இவளை மோட்டார் வண்டியில் வைத்துக் கொஞ்சநேரம் கடற்கரைக்குக் கொண்டுபோங்கள். நான் தவறாமல் மாலை ஆறுமணிக்கு வருகிறேன். பயப்படவேண்டாம்” என்று கூறியவண்ணம் ஒரு காகிதத்தில் மருந்துகளின் பெயரை எழுதிக் கொடுத்து, “நான் போய்விட்டு வருகிறேன். பார்லி அரிசிக் கஞ்சியையாவது காப்பியையாவது கொஞ்சம் கொடுங்கள். ஆகாரம் அதிகமாகச் செல்லவில்லையே என்னும் கவலை வேண்டாம்” என்று சொல்லி விட்டு விடைபெற்றுக் கொண்டு எழுந்து சென்றாள் துரைஸானி.

உடனே நூர்ஜஹான் சீட்டிற் காட்டப்பட்ட மருந்தையும் வரவழைத்து மிகவும் பாடுபட்டு மேனகாவுக்கு அருந்து வித்தாள். அதன் பிறகு நான்கு நாழிகை வரையில் அவள் நன்றாகத் துயின்று அப்புறம் கண்ணை விழித்தாள். அவளுடம்பில் புதிய மாறுபாடு உண்டாயிற்று. பசியும் களைப்பும் தோன்றின. முகம் மார்பு முதலியவிடங்களில் வியர்வை கசிந்தது; சிறிது நேரம் கழிந்தது; சயனத்தில் ஒரு நிலைமையிலிருப்பது அவளுக்கு அருவருப்பாகவும் துன்பமாகவும் தோன்றியது. அப்புறம் இப்புறம் புரண்டு படுத்து, மெல்ல எழுந்து அருகிலிருந்த திண்டில் சாய்ந்து கொள்ள முயன்றாள். அதைக்கண்ட நூர்ஜஹான், “மேனகா! நான் பிடித்துக் கொள்ளுகிறேன்; மெல்ல எழுந்து சாய்மான நாற்காலியில் உட்கார்ந்து கொள்ளுகிறாயா? அதில் சாய்ந்து கொண்டால் சுகமாயிருக்கும்” என்று அன்போடு கேட்க,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/16&oldid=1251480" இலிருந்து மீள்விக்கப்பட்டது