பக்கம்:மேனகா 2.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேம்போ கரும்போ

161

அவசியந்தான். ஆனால், குற்றம் செய்தவர்களை நியாயாதிபதி தண்டித்தால், அந்தத் தண்டனை பொருத்தமானதென்றுதானே எல்லோரும் மதிக்கிறார்கள். விஷமுள்ள பாம்பு, தேள் முதலிய ஜெந்துக்களை இரக்க மின்றி மனிதர் அடித்துத் துகைய லாக்குகிறார்களே! அவைகள் மரணவேதனை அடையும்போது நம் மனம் வருத்தமடைந்தாலும், அந்தத் தண்டனையை நாம் நியாயமான தென்றே நினைக்கிறோ மல்லவா! அதைப்போல, அவர்களும் அவர்களுடைய பெண்ணும் எவ்விதமான மனிதர்கள் என்பது மற்றவர்களைவிட எனக்கு அதிக நன்றாகத் தெரியும் ஆகையால், என் மனம் அப்படி நினைத்தது. மனச் சாட்சியை விலக்க முடியுமா? - என்றான்.

அதைக் கேட்ட அந்த வெள்ளை மடமங்கை ஒருவகையான கிலேசம் அடைந்தாள். அன்னிய மாதாகிய தான், தனக்கு எவ் விதமான சம்பந்தமுமற்ற அவர்களது குடும்ப விஷயங்களைப் பற்றி அதிகமாகப் பேசுவதால், அந்த மனிதருக்கு ஆயாசம் உண்டாகுமோ வென நினைப்பவள் போல அவள் ஒருவகையான நாணமும் சஞ்சலமும் அடைந்தாள். அந்த விஷயத்தில் எவ்விதமான சிரத்தையும் இல்லாதவளைப் போலவும், உலகத்தின் பொது நியாயத்தைப் பேசுகிறவள் போலவும் காட்டிக் கொண்டவளாய், “உலகத்தில் மாமனார் மாமியார்களின் மேல் அதிருப்தியும் ஆத்திரமுங் கொள்ளாத மாப்பிள்ளைகளே இல்லை; நீங்கள் உங்களுடைய மனைவி வீட்டார் மேல் தப்பான அபிப்பிராயம் கொண்டிருப்பதற்குத் தகுந்தாற்போல அவர்களுக்குப் பல துன்பங்கள் வந்து நேர்ந்தன. அதைக்கொண்டு அவர்கள் கெட்டவர்களென்றும், ஆகையால் தண்டிக்கப்பட்டார்க ளென்றும் சொல்வது காகதாலி நியாயமேயாகும். உலகத்தில் குற்றமற்ற மனிதர்களுக்கு ஆபத்துகளும் துன்பங்களும் வருவதில்லையா? அப்படி துன்பப்படுவோர் நியாயமாகவே

மே.கா.II-11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/162&oldid=1252181" இலிருந்து மீள்விக்கப்பட்டது