பக்கம்:மேனகா 2.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேம்போ கரும்போ

169

அவளைக் கொல்லப்போனது நீதியாகுமா? உங்களுடைய ராமாயணத்தில் சீதையை ராமர் கவனிக்காமல் விட்டு விட்டாரா? அவளை மீட்ட பிறகல்லவா, அவளுடைய கற்பு அழிந்ததா இல்லையா என்பதைச் சோதனை செய்து ஏற்றுக் கொண்டார். அதுவல்லவா புருஷ தர்மம். நீங்கள் உங்களுடைய ஸ்திரீகளின் மன உறுதியைப் பற்றி இவ்வளவு கேவலமான அபிப்பிராயங்கொண்டிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. வெள்ளைக்காரார்களாகிய எங்கள் ஜாதியில் புருஷர் தமது ஸ்திரீகளின் மேல் இவ்வளவு எளிதில் அவநம்பிக்கைப் படமாட்டார்கள். அவர்களுடைய மனதின் உறுதியை ஒருமுறை கண்டு கொள்வார்களானால், அவர்கள் எவ்விடத்துக்குப் போனாலும், அவர்களுடைய மனவுறுதியைப் பற்றி இப்படி சந்தேகப்படமாட்டார்கள். பெண் மக்களுக்கு மன உறுதியில்லை யென்று நினைத்தீர்களா? உங்களுடைய மனதாகிலும் அழகிய ஸ்திரீகளைக் கண்டால் சலிக்கும். அவர்கள் மனதால் கூட வேறு புருஷரை நினைக்க மாட்டார்களே! - என்றாள்.

அதைக் கேட்ட வராகசாமியின் மனதில், அந்த வெள்ளைக்கார மடந்தை சொல்வது நியாயமான சங்கதி யென்று தோன்றினதாயினும், அவள்மீது ஒருவகையான கோபமும் அவனது மனதில் உண்டாயிற்று. நிச்சயமாக உண்மை யென்று தெரிந்த அந்த விஷயத்தைப்பற்றி, அவள் வெறும் தத்துவம் பேசி, வீண் வாக்குவாதம் செய்கிறாளென்று அவன் நினைத்துக்கொண்டவனாய், “நீ சொல்வதெல்லாம் சரிதான். என் வீட்டிலுள்ள சகோதரிகள் ஒருகாலும் என்னை வஞ்சிக்கக்கூடியவர்களல்ல. ஆகையால், அவர்கள் ஏதேனும் துன்பம் செய்திருப்பார்களென்று நினைக்கவும் முடியாது. அவர்களுடைய பாதுகாப்பில் வீட்டிலிருக்கையில், அன்னியர் அவளை வஞ்சித்து அழைத்துக்கொண்டு போயிருப்பார்கள் என்று நினைப்பதும் அசம்பாவிதம். ஆகையால், அவளே தன் முழு மனதோடு தன்னுடைய முயற்சியினாலேயே போயிருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/170&oldid=1252223" இலிருந்து மீள்விக்கப்பட்டது