பக்கம்:மேனகா 2.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

மேனகா

கிறாள். அதைப் பற்றி சந்தேகமே இல்லை. ஆகையால், அவளை நாம் மீட்க நியாயமே இல்லை என்றான்.

அதைக் கேட்ட அந்த வெள்ளைக்காரப் பணிப்பெண் மிகவும் இரக்கமும் விசனமுங்கொண்டு, “ஐயோ பாவம்! சகோதரிகள் வஞ்சம் செய்யமாட்டார்கள். ஆனால், உயிருக்குயிரான மனைவி மாத்திரம் செய்வாளா! ஆம் ஆம் உண்மைதான். அதிக ஆசையை எவர்கள் வைக்கிறார்களோ அவர்கள்மேல் சந்தேகம் கொள்வதே உலக வழக்கந்தானே! அதிருக்கட்டும். நீங்கள் இன்னொரு முக்கியமான விஷயத்தைக் கவனித்தீர்களா? அவள் தஞ்சாவூரில் இருந்தபோது சுயேச்சையாக நாடகம் பார்த்து வந்தாளென்பதும், தனிமையில் ஒரு வீடு வைத்துக்கொண்டு ரகசியமாக அவ்விடத்தில் நாடகக்காரனைச் சந்தித்து வந்தாள் என்பதும் கடிதத்திலிருந்து தெரிகின்றனவே! அங்கிருந்தபடியே நாடகக்காரனோடு பட்டணத்துக்கு ஓடிவந்து இரகசியமான ஒர் இடத்தில் இருப்பது சுலபமா? அல்லது தன்னை அழைத்துக் கொள்ளும்படி உங்களுக்குக் கடிதம் எழுதி, எவ்வளவோ பாடுபட்டு, உங்கள் வீட்டிற்கு வந்தபிறகு போகவேண்டிய காரணமென்ன? உங்கள் வீட்டிலிருந்து தப்பித்துக்கொண்டு போவது கடினமாயிருக்கும் என்பதை அவள் யோசித்திருக்க மாட்டாளா? நாடகக்காரன் மேல் ஆசை வைத்தவள் அப்படியே ஒடிப்போக நினைப்பாளேயன்றி அப்புறம் தன் புருஷனிடம் வர ஒருநாளும் விரும்பமாட்டாள். அப்புடிப் பட்டவளுக்குச் சொந்தப்புருஷன் வேப்பங்கா யல்லவா?” என்றாள்.

அதைக் கேட்ட வராகசாமி சிந்தனையில் ஆழ்ந்தான். அவனது மனதில் பெருத்த குழப்பம் உண்டாய்விட்டது. மேனகா குற்றவாளி என்ற நினைத்திருந்த அவனது மனஉறுதி ஒருவாறு தளர ஆரம்பித்தது. ஒருகால் அவள் குற்றமற்றவளா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/171&oldid=1252225" இலிருந்து மீள்விக்கப்பட்டது