பக்கம்:மேனகா 2.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாதாள எட்சினி வசியம்

185

மன்னரான தனது மாமனாரும், நூர்ஜஹானும் தனது காலில் வீழ்ந்து மன்னிப்புக் கேட்பதாகவும், தான் அவர்களை அலட்சியம் செய்வதாகவும் அப்போதே மனதில் பாவித்துக் கொண்டான். மேனகாவை ஒரு தனியான பங்களாவில் வைத்து அவளோடு கொஞ்சிக் குலாவி, சரச சல்லாபம் செய்து இன்புற்று வாழ்வதாக நினைத்து மனக்கோட்டை கட்டினான். “சரி; சட்டமும் தொடராம லிருக்கும்படி என்ன செய்யப் போகிறீர்கள்?” என்றான்.

மந்திர:- அதற்கு உம்மிடத்தில் ஒரு தஸ்தாவேஜு இருக்க வேண்டும். பெருந்தேவியம்மாள் பெண்ணுக்குத் தாயென்றும், சாமாவையர் பெண்ணுக்கு அண்ணனென்றும், பெண் கலியாணம் ஆகாத மைனரென்றும், அந்தப் பெண்ணை சவரட்சணை செய்யமாட்டாமையால் அவர்கள் அவளை உம்மிடம் விற்றுவிட்டதாகவும், அவளை நீர் மகம்மதியப் பெண்ணாக்கி மணந்துகொள்ள அவர்கள் உமக்கு அனுமதி கொடுத்திருப்பதாகவும் ஒரு கடிதம் அவர்களால் எழுதப்பட்டு, உம்மிடம் வந்து சேரவேண்டும். அதை நீர் வைத்துக் கொண்டிருந்தால், சட்டப்படி உம்மீது குற்றம் ஏற்படாது. அந்தப் பெண்ணின் புருஷன் உம்மீது எவ்வித நடவடிக்கையும் எடுத்துக் கொள்ள முடியாது.

நைனா:- (சிறிது யோசனை செய்து) இது நல்ல யுக்திதான். ஆனால் அவர்கள் அந்த மாதிரி கடிதம் எழுதிக் கொடுக்க மாட்டார்களே சாமாவையர் ஒரு வேளை எழுதிக் கொடுத்தாலும் கொடுக்கலாம். அந்த அம்மாள் அதற்குச் சம்மதிக்க மாட்டாளே! அதற்கு என்ன தந்திரம் செய்கிறது?

மந்திர:- அதற்கு நான் இருக்கிறேன். கவலைப்பட வேண்டாம். என்னிடத்தில் ஒரு வகையான சொக்குப்பொடி இருக்கிறது. அவர்களிடம் போய் நான் பேசிக்கொண்டே யிருந்து அந்தப் பொடியில் சிறிதளவு காற்றில் வீசினால், நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/186&oldid=1252345" இலிருந்து மீள்விக்கப்பட்டது