பக்கம்:மேனகா 2.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192

மேனகா

அவ்வாறே பகல் பத்து மணி சமயமானது. இரயில் சிப்பந்திகளான யாரோ இரண்டு மனிதர் அவருக்கு மிகவும் அருகில் பேசிய குரல் கேட்டது.

“அடே கண்ணுச்சாமி! இதென்னடா மூட்டை!” என்று ஒருவன் வியப்போடு கூறியவண்ணம் அருகில் ஓடிவந்தான்.

கண்ணு:- ஆமடா கந்தா! இது நேத்து இல்லேடா! யாரோட வேலையோ இது தெரியலடா.

கந்தன்:- தண்டவாளத்திலே கட்டியிருக்குதுடா! (காலால் மூட்டையைப் புரட்டி) அடேடோ! பொணம்மாதிரி இருக்குதுடா! கொலை நடந்திருக்குதுடா!

கண்ணு:- அசையுதுடா! உசிர் இருக்குது. மூட்டையே அவுடா பார்க்கலாம் - என்றான்.

உடனே இருவரும் விரைவாக அந்த மூட்டைக்கருகில் நெருங்கி மிகவும் பாடுபட்டு அதன் கட்டுக்களையும் சாக்கையும் விலக்கினர். அதற்குள் துவண்டு வாடி வதங்கி மூச்சு விட மாட்டாமல் கண்களை மூடிக்கொண்டு அசைவற்று மூர்ச்சித்துக் கிடந்த ஐயரை கோணிப் பையிலிருந்து அவர்கள் உடனே வெளியில் இழுத்துக்போட்டனர்; அவரது வாயிலிருந்த துணிப்பந்தை விலக்கினர்; “அடே யாரோ பெரிய மனுசருடா! உசிர் இருக்குதுடா அடே கந்தா! ஒடிப்போயி தண்ணி கொண்டாடா!” என்றான் கண்ணுச்சாமி. அதைக் கேட்ட கந்தன் ஒட்டமாக ஒடி ஒரு செம்பில் தண்ணீர் கொணர்ந்தான். அந்த அமுத சஞ்சீவி உடனே ஐயரது வாயில் விடப்பட்டது; முகத்திலும் தடவப்பட்டது. அடுத்த நிமிஷத்தில் கைகால்களின் மரப்பு நீங்க ஆரம்பித்தது. மூச்சும் ஒழுங்குபட்டது. உணர்வைப் பெற்ற ஐயர் பிரம்மாநந்தம் அநுபவிப்பவரைப் போலானார். என்றாலும், வாயும் உடம்பும் பச்சைப் புண்ணாயிருந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/193&oldid=1252352" இலிருந்து மீள்விக்கப்பட்டது