பக்கம்:மேனகா 2.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாதாள எட்சினி வசியம்

203

காணும்போதெல்லாம், அவரிடம் புரளியாகப் பேசுவார்; என்னவோ ஏழை பிழைத்துப்போகட்டுமென்று, அவருடைய சாட்சியத்தை ஏற்றுவந்தார்; வழக்கப்படி அவரைக்கண்ட சப் ரிஜிஸ்டிரார் நகைத்து, “ஒகோ! செட்டியாரே! வாரும்; செட்டியார் இல்லாத பத்திரமுமில்லை; உலகத்தில் அவருக்குத் தெரியாத மனிதருமில்லை; கப்பல்காரர் முதல் பிச்சைக்காரர் வரையில் செட்டியாருக்குத் தெரியும். செட்டியாரே! வாரும் இப்படி; ( சிரித்துக் கொண்டு ) உமக்கு மரக்காயரைத் தெரியுமா? உம்மைக் கேட்கவே வேண்டியதில்லை; நீர் யாரைத் தான் தெரியாதென்று சொன்னீர்கள்? இந்த மரைக்காயரை உமக்கு எப்படி ஐயா! தெரியும்?” என்றார். செட்டியார் பல்லைப் பல்லைக்காட்டிக் கெஞ்சி நயந்து நிர்த்தனம் செய்தவராய், “தெரியும்; அடிக்கடி ஐயர் வீட்டுக்கு வருவார், பார்த்திருக்கிறேன்” என்றார்.

சப் ரிஜிஸ்டிரார்:- சரி; ஒழிந்து போகட்டும். இப்படி வாருங்கள், உங்கள் இரண்டுபேருக்கும் இந்த சாயுபுவைத் தெரியுமா!

செட்டியார் :-தெரியும்
ஐயர்

சப்ரி:- இவர் கப்பல்கார நூர் முகம்மது மரைக்காயர்தானா?

செட்டியார் :-தெரியும்
ஐயர்

சப்ரி:- இவர் பங்களாவுக்காக ரூ. 10,500 வாங்கிக் கொண்டது தெரியுமா?

செட்டியார் :-தெரியும்
ஐயர்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/204&oldid=1252376" இலிருந்து மீள்விக்கப்பட்டது