பக்கம்:மேனகா 2.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210

மேனகா

கொண்டு அவரிடம் வந்து சேருவாள். அவளை இனிமேல் இந்த ஊரில் வைத்துக்கொள்ளக் கூடாது; அடுத்த கப்பலில் எஜமானர் சிங்கப்பூருக்கு அவளை அழைத்துக் கொண்டுபோய் அங்கே வைத்துவிடுவார். அவர் இனிமேல் இந்த ஊரில் மூன்று மாசமும் சிங்கப்பூரில் மூன்று மாசமும் இருப்பார்: அவளை அவர் கோஷா ஸ்திரியைப்போல மூடிக்கொண்டு போவாராதலால், அவளை எவரும் கவனிக்கவும் மாட்டார்கள்; ஆனால் தெய்வச் செயலாக, கப்பலிலோ சிங்கப்பூரிலோ அவளை யாராவது ஹிந்துப் பெண்ணென்று கண்டு கொண்டால், எஜமானுக்கு ஆபத்து நேரும்; அதற்காக நானும் அவரும் ஒரு யோசனை செய்து இதோ ஒரு நகல் தயாரித்திருக்கிறோம். அதைப்போல நீர் எழுதி அதில் நீரும், பெருந்தேவியம்மாளும், கையெழுத்திடச் செய்து வாங்கிவரச் சொன்னார். சாதாரணமாக இந்தக் கடிதம் உபயோகப்படப் போகிறதில்லை, இருந்தாலும், முன் னெச்சரிக்கையாக இது கையில் இருக்க வேண்டியது அவசியமல்லவா?” என்றார்.

உடனே சாமாவையர் சிறிதும் யோசியாமல் மந்திரவாதி கொடுத்த நகலை வாங்கிப் படித்துவிட்டு, “சரி; இதுதானா பெரிய காரியம்; அப்படியே எழுதித் தருகிறோம். நீர் இங்கே இரும். நான் போய் இதோ வந்துவிடுகிறேன்” என்று சொல்லிவிட்டு எழுந்து அடுத்த வீட்டிற்குச் சென்று நிகழ்ந்த விஷயங்களையெல்லாம் பெருந்தேவியம்மாள், கோமளம் ஆகிய இருவரிடத்திலும் வெளியிட்டு அவர்களை மிகவும் பயமுறுத்த, கடிதம் எழுதிக் கொடுப்பதற்கு அவர்களும் எளிதில் இசைந்தனர். மந்திரவாதி கொடுத்த நகலை சாமாவையர் படித்துக்கொண்டே வர கோமளம் வேறொரு காகிதத்தில் அப்படியே எழுதினாள்; அதில் பெருந்தேவியம்மாள் கையெழுத்துமிட்டாள். அடியில் சாமாவையரும் கையெழுத் திட்டு அதை எடுத்துக்கொண்டு தமது கிரகத்திற்கு வந்து அதை மந்திரவாதியிடம் கொடுத்தார்; மந்திரவாதி அதை வாங்கிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/211&oldid=1252385" இலிருந்து மீள்விக்கப்பட்டது