பக்கம்:மேனகா 2.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாதாள எட்சினி வசியம்

213

பிரகாசித்தன. அவரது சொல்லைக் கேட்ட அம்மாள் சிறிது கோபங்கொண்டு அதட்டிய குரலில், “அவர் இங்கே இல்லை ஐயா என்கிறேன். மேலும் மேலும் கேட்கிறீரே; அவரை இங்கே அடுக்குப்பானையில் வைத்திருக்கிறோமோ, போமையா வெளியில்; திறந்த வீட்டில் என்னவோ நுழையும் என்பார்கள்; அதைப்போல கூடத்திற்கு வந்து விட்டீரே, சுத்தப் பட்டிக்காட்டு மனிதராயிருக்கிறீரே!” என்றாள். அதைக்கேட்ட மந்திரவாதி, அதைக் காதில் வாங்காதவரைப் போல நடித்து மிரண்டு மிரண்டு பார்த்து. “இல்லை யம்மணி! கோபித்துக்கொள்ளவேண்டாம்; நான் ஐயரிடத்தில் வேலையாக வரவில்லை. அம்மாளிடத்திலேதான் வேலையாக வந்தேன்; நான் மலையாளத்து மந்திரவாதி” என்றார்.

அதைக்கேட்ட அம்மாள் முன்னிலும் அதிகரித்த ஆத்திர மடைந்து, “இப்போது நீ வீட்டை விட்டு வெளியில் போகிறாயா? அல்லது ஆர்டர்லியைக் கூப்பிட்டு மரியாதை செய்தனுப்பட்டுமா?” என்றாள்.

உடனே மந்திரவாதி நயமாகவும் பணிவாகவும் பேசத் தொடங்கி, “அம்மணியிடம் நல்ல சன்மானம் வாங்கிக் கொண்டு போக வந்திருக்கிறேன். என்னை எந்தச் சேவகன் தள்ளுவான்? அம்மணிக்கு நல்ல தங்கமான குணம்; முன்கோபம் மாத்திரம் கொஞ்சம் அதிகம். ஆனால், வெளுத்த தெல்லாம் பால்; கருத்ததெல்லாம் தண்ணீர்; என்ற எண்ணம். அதை அறிந்து தான் ஐயர் ஸ்டேஷனுக்குப் போவதாகச் சொல்லி ஏமாற்றி விட்டு பட்டப்பகலிலேயே தாசி ஞானாம்பாள் வீட்டுக்குப் போயிருக்கிறார். உங்களுக்கும் ஐயருக்கும் இந்த விஷயத்தில் வருத்தமென்பது எனக்குத் தெரியும்; நான் வசிய மருந்து செய்வதில் மிகவும் கை தேர்ந்தவன். இதோ ஒரு மை தருகிறேன்; அதை நீங்கள் புருவத்தில் தடவிக் கொண்டால் அடுத்த நிமிஷம் ஐயர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/214&oldid=1252389" இலிருந்து மீள்விக்கப்பட்டது