பக்கம்:மேனகா 2.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புண்ணாகச் செய்ததினி போதும் பராபரமே?

225

போகிறேன். உயிரோ போய்க் கொண்டே இருக்கிறது: முக்கால் பாகம் போய்விட்டது. இவள் ஒருகால் கண்ணைத் திறந்து பேசினாலும் பேசுவாள். அதுதான் மரண காலத்தின் அறிகுறி; ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு, அதே மருந்தை உட்புறம் செலுத்தி விட்டு, துரை வெளியிற் போக எழுந்தார்.

அப்போது அந்த அறைக்குள் ஒரு தபால்காரன்துழைந்து, “கனகம்மாள் யார்?” என்றான்; அவள், “நான்தான்” என்றாள். அவன் உடனே ஒரு கடிதத்தை எடுத்துக் நீட்டி, “ஒரு அணா கொடுக்க வேண்டும்; தலை ஒட்டப்படவில்லை” என்றான். உடனே கிட்டன் ஒரு அனாவைக் கொடுத்துவிட்டு, கடிதத்தை வாங்கிக்கொண்டான். தபாற்காரன் வெளியிற் போய் விட்டான். கடிதம் எங்கிருந்து வந்தது என்பதை அறிந்து கொள்ளும் பொருட்டு துரை சிறிது தயங்கி நின்றார். கிட்டன் கடிதத்தைப் பிரித்தான்; அது பென்சலால் விகாரமாக அடியில் வருமாறு எழுதப்பட்டிருந்தது:

“நான் பட்டணத்திலிருந்து செங்கல்பட்டுக்கு வந்து பகற் கொள்ளைப்பாக்கத்திற்குப் போய் செட்டியாரைக் கண்டேன். எஜமான் வீட்டையும் நிலத்தையும் அவரிடம் அடமானம் வைத்து ஆயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டு முந்திய நாள் சாயுங்காலமே செங்கல்பட்டுக்கு வந்து விட்டதாக செட்டியார் சொன்னார். நான் உடனே செங்கல்பட்டுக்கு வந்தேன்; ரயிலடியிலும், செங்கல்பட்டு, நத்தம் முதலிய ஊர்களிலும் தேடினேன்; பலரிடம் விசாரித்தேன்; எஜமானைப்பற்றி செய்தி ஒன்றும் கிடைக்க வில்லை. போலீசாரிடமும் தெரிவித்தேன்; அவர்கள் ரயிலுக்கு வந்து அங்குள்ள சிப்பந்திகள், வண்டிக்காரர்கள் முதலியோரை விசாரித்தனர். கையில் பெருத்த பணமூட்டையோடு வந்த ஒரு ஐயர் இரவில் அகாலத்தில் வந்து பட்டணம் போக வேண்டு மென்று

மே.கா.II-15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/226&oldid=1252401" இலிருந்து மீள்விக்கப்பட்டது