பக்கம்:மேனகா 2.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




25வது அதிகாரம்

பேய்க் கூத்து

பெருந்தேவியம்மாளும் கோமளமும் சாமாவையர் சமேதராக தென்னை, கமுகு, மா, பலா, மாதுளை முதலிய மரங்களும், பூத்தொட்டிகளும், வாவிகளும், மணல் மேடுகளும், சலவைக்கல் மேடைகளும், சம்பங்கிக் கொடிகள் நிறைந்த பன்னக சாலைகளும், சவுக்கண்டிகளும், விளையாடும் இடங்களும், மண்டபங்களும், மாடங்களும் பிறவும் நிறைந்த உன்னதமான அந்த மாளிகைக்குள் காலடி வைத்தவுடன், அவர்கள் தமது பழைய நிலைமையை முற்றிலும் மறந்து எப்போதும் பங்களாவிலேயே பிறந்து வளர்ந்து வந்தோரைப் போலவும், புராதனமாக மகா மேன்மையான நிலைமையில் இருந்தோரைப் போலவும் மாறிவிட்டனர். அழகிய இரமணீய மான அந்த வனமாளிகைக்குத் தாங்கள் எஜமான ரானதை அவர்களது மனதே ஒரு சிறிதும் நம்பவில்லை; பெருந் தேவியம்மாளும், கோமளமும் விக்கிரயப் பத்திரத்தைப் படித்துப் பார்த்துக் கொண்டனர்; பங்களாவின் ஒவ்வோர் இண்டு, இடுக்கு, மூலை முடுக்குகளையும், விடாமல் ஒடியோடிப் பார்த்து, அப்போதே கண் பெற்ற பிறவிக் குருடன் உலகத்தைப் புதிதாய்ப் பார்ப்பதைப்போல பெரிதும் வியப்படைந்து பார்த்துப் பெருமகிழ்வடைந்து, உணவையும் துயிலையும் நினையாமல், ஆநந்தப்பரவசமடைந்து சுவர்க்க லோகத்தில் அப்போதே நுழைந்தவரைப்போலக் காணப்பட்டனர். மாம்ச மலை போல விருந்த பெருந் தேவியம்மாள் மான் குட்டியைப்போலப் பூஞ்சோலைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/234&oldid=1252410" இலிருந்து மீள்விக்கப்பட்டது