பக்கம்:மேனகா 2.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

236

மேனகா

அவ்வளவு விசாலமான மாளிகையில் தாம் மாத்திரம் தனிமையாக இருப்பதில் சுகமில்லையென்று நினைத்து, சாமாவையரையும் அவரது மனைவியோடு அங்கு வந்து இலவசமாகக் குடியிருக்கும்படி அவர்கள் அநுமதி கொடுத்து விட்டனர்.

அவர்கள் அங்கே குடிபுகுந்த பிறகு நான்கு நாட்களில் ஒரு முகூர்த்த நாள் இருந்தது. வரதாச்சாரி முத்லியோரை வரவழைத்து அன்றைய தினம் நிச்சயதார்த்தம் நடத்துவ தென்றும், அதிற்கு மூன்றாம் நாள் திருப்பதியில் கலியாணத்தை முடித்துவிட வேண்டு மென்றும் அவர்கள் நிச்சயித்தனர். அதற்காக, உடனே வராகசாமியை வைத்தியசாலையிலிருந்து வரவழைக்க நினைத்து டாக்டரிடம் சாமாவையரும், பெருந்தேவியம்மாளும், இரண்டு நாட்களுக்கு முன்னரே சென்று விட்டனர்; தாம் கடற்கரையோரத்தில் பங்களா வாங்கி யிருப்பதால், அதற்குள் வீசும் நல்ல காற்றினால் வராகசாமி பங்களாவில் சீக்கிரம் குணமடைவானென்று தெரிவித்துக் கொண்டனர். வராகசாமியின் முழங்காற் புண் அப்போதும் ஆறாது இருந்தமையாலும், அவனது உடம்பில் இரத்தமே இல்லாமையால் அவன் அப்போதும் மெலிந்த நிலைமையில் இருந்தமையாலும், அவனோடு இரவு பகலாய் வெள்ளைக் காரப் பணிமகளிருந்து மருந்துகள் கொடுத்துவர வேண்டியது அவசியமாக இருந்தது. ஆதலால், டாக்டர் அவனை அனுப்ப மறுத்து விட்டார். இவர்கள் அவ்வளவோடு விடாமல் மேலும் வற்புறுத்தினர். மறுநாள் வராகசாமியின் தகப்பனாருக்குச் சிரார்த்த தினமென்றும், அதற்கு அவன் வந்தே தீர வேண்டு மென்றும் அவர்கள் உடனே பொய்யுரை மொழிந்தனர்; வராகசாமி முழுவதும் குணப்படும் வரையில் அந்த வெள்ளைக்காரப் பணிப்பெண் தமது பங்களாவில் அவனோடுகூட விருக்கலாமென்றும், அவளுக்காகும் செலவைத் தாமே கொடுத்து விடுவதாகவும் ஒப்புக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/237&oldid=1252413" இலிருந்து மீள்விக்கப்பட்டது