பக்கம்:மேனகா 2.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேய்க் கூத்து

239


கோமளம் :- (மிகவும் சந்தோஷமாகவும் உற்சாகத் தோடும்) அடே சாமா! நீ எப்போதும் உன்னுடைய அற்ப புத்தியை விடுகிறதே இல்லை. இப்போது பங்களாவை வாங்கியவுடனே முதலில் யாரைச் சரிசமானமாக அழைத்துக் கொண்டு வந்தோம்? யாருக்கு விருந்து நடத்தினோம்? அதை நீ நினைக்கவில்லையே? நீ இல்லாமல் ஒரு நிமிஷம்கூட எங்களுக்குப் பொழுது போகுமாடா? போடா பைத்தியக் காரா! அதென்ன சின்னச் சின்னப் பேச்சு சிங்காரப் பேச்சுப் பேசுகிறாயே! எங்களுக்கு இவ்வளவு ஐசுவரியம் வந்து விட்டதே என்று பொறாமைப் படுகிறாயோடா?

பெரு:- சேச்சே! சாமாவை அப்படி நினைக்கா தேடி! ஆயிரம் பேர் இருந்தாலும் நம்முடைய சாமாவைப்போல் ஆவார்களா? அசட்டுத்தனமாக உளறாதே! அடே சாமா; உனக்கேன் இந்தச் சந்தேகம்? பங்களாவை வாங்கினால் என்ன? மோட்டாரை வாங்கினால் என்ன? எல்லாம் யாரால் வந்தது? நீ இல்லாதிருந்தால் இதெல்லாம் எப்படி வரும்? உன்னை மறந்தால் சாப்பாடு அகப்படுமா? நாங்கள் நன்றி கெட்ட பன்றிக ளென்று நினைக்காதே; நாங்களுமென்னடிப்டி கலெக்டர் வீட்டாரைப்போல அற்பர்களா, அகம்பாவம் கொண்டவர்களா?

கோமளம்:- அதனாலேதான் ஈசுவரன் டிப்டி கலெக்டர் வாயில் பக்காச் சேர் மண்ணை வாரிப் போட்டுக் குத்தி விட்டான். அவனுடைய உத்தியோகம் போய்விட்டது. வாய்க்கரிசிக்குக்கூட வழியில்லாமல் திருடன், வீட்டைத் துடைத்துக்கொண்டு போய்விட்டான். தான் அழகிலே சிறந்த பவளக்கொடி என்று கருவங்கொண்டு மினுக்கிய தேவடியாள் முண்டையான தங்கத்தின் காது மூக்குகளை யெல்லாம் அறுத்து சூர்ப்பனகா பங்கம் செய்துவிட்டான். என்ன இருந்தாலும் மனிதருக்கு இவ்வளவு அகம்பாவம் உதவாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/240&oldid=1252416" இலிருந்து மீள்விக்கப்பட்டது