பக்கம்:மேனகா 2.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




26வது அதிகாரம்

பழம் நழுவி பாலில் விழுந்தது!

வாசலில் வந்து நின்ற மோட்டார் வண்டியில் வைக்கப் பட்டிருந்த ஒரு தொட்டிலில் வராகசாமி படுத்திருந்தான். சாமாவையர் வண்டி ஒட்டுகிறவனுக்கருகில் உட்கார்ந் திருந்தார். பின் புறத்திலிருந்த முக்கியமான ஆசனத்தில் டாக்டர் துரைஸானியும், வெள்ளைக்காரப் பணிமகளும் உட்கார்ந் திருந்தனர். வண்டி உள்ளே வந்து நின்றவுடன் அவர்கள் யாவரும் கீழே இறங்கினார்கள். வராகசாமி இருந்த தொட்டில் உடனே கீழே இறக்கப்பட்டு உட்புறத்திலிருந்த ஒரு வசதியான அறைக்குக் கொண்டு போகப்பட்டது. அங்கிருந்த ஒரு கட்டிலில் வராகசாமி மெல்ல விடப்பட்டான். அவர்களோடு ஏராளமான மருந்துகளும் வந்து சேர்ந்தன. அப்போது டாக்டர் துரைஸானி வராகசாமியின் நாடியைப் பிடித்துப் பார்த்தபின் சில மருந்துகளைத் தயாரித்துப் பருகுவித்தாள். அவனுடன் எவரும் அதிகமாகப் பேசக்கூடா தென்று கண்டிப்பாகக் கூறினாள். பணிமகளை நோக்கி, சாப்பாட்டுக்குப் போகும் வேளைகள் நிற்க, மற்ற வேளைகளில் வராகசாமியை விட்டு அகலாமலிருந்து மணிக் கணக்கின்படி மருந்துகளைப் பிரயோகித்துக் கொண்டிருக்கும் படி அவளிடம் கூறிவிட்டு சாமாவையர், சகோதரிகள் ஆகிய மூவரையும் அவ்வறையி லிருந்து வெளியேற்றிவிட்டு வைத்தியசாலைக்குச் சென்றனள்.

வராகசாமியின் உணர்வு, இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னரே நன்றாகத் தெளிவடைந்திருந்தமையாயினும், முழங்காலில் எலும்பு முறிந்துபோன இடத்தில் இன்னமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/245&oldid=1252421" இலிருந்து மீள்விக்கப்பட்டது