பக்கம்:மேனகா 2.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழம் நழுவி பாலில் விழுந்தது

245

புண் ஆறாமலிருந்தது. அவனது தேகத்தில் இரத்தமே சிறிதும் இல்லாமற் போயிருந்தமையால், அவன் தனது தலையை நிமிர்த்தவும் வல்லமையற்றுச் சோர்ந்து சோர்ந்து படுத்தான். அத்தகைய கேவலமான நிலைமையில் அவன் வைத்திய சாலையில் கட்டிலிலிருந்து தொட்டிலுக்கு நகர்த்தப் பட்டும், பங்களாவுக்கு வந்தவுடன் தொட்டிலி லிருந்து கட்டிலிற்கு நகர்த்தப்பட்டும், வண்டியின் ஒட்டத்தினால் அசைக்கப்பட்டும் மிகவும் அதிர்ச்சி யடைந்தமையால், டாக்டர் துரைஸானி பங்களாவைவிட்டுப் போன போது அவன் கண்களை மூடி உறங்கிக்கொண்டிருந்தான். தாங்கள் தாராளமாக வராகசாமி யுடன் பேசலாமென்னும் ஆவலோடு ஓடிவந்த சகோதரிமார் இருவரும், இரண்டு வெள்ளைக் காரிகளும் அவனைக் கட்டிக்காத்துத் தம்மை அருகில் நெருங்கவிடாமல் அதிகாரம் செய்ததைக் கண்டு கோபமடைந்து முகத்தைச் சுளித்துக் கொண்டு அப்புறம் போய்விட்டனர். வராகசாமி யோடு கூட தனிமையில் விடப்பட்டிருந்த வெள்ளைக்காரப் பணிமகள் ஒரு நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு, மிகவும் கவலையோடும் சிரத்தையாகவும் வராகசாமியைக் கவனித்துக் கொண்டும், அவனது கைகளையும் கால்களையும் அன்பாக வருடிக் கொண்டும், அவன் விழித்தபோது அவனுடன் இனிமையாகப் பேசிக்கொண்டும் இருந்தாள். அவள் சிறிதும் கூசாமல் வராகசாமியின் உடம்பைத் தொட்டுத் தடவிக் கொடுத்துக் பெண்டாட்டியைப் போல அவனுக்குரிய காரியங்களை யெல்லாம் செய்ததையும், அவன் சிறிதும் வெறுப்பின்றி அவைகளை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டதையும், அவள் அதிரூபலாவணியம் வாய்ந்த கந்தருவ ஸ்திரீயாயிருந்ததையும் கண்ட சகோதரிகள் இருவரின் மனதிலும் பொறாமைத்தி மூண்டது. யாவற்றிற்கும் உரிமையுடைய தாங்கள் தூரத்தில் நிற்பதும், எவளோ அன்னியப் பெண்ணொருத்தி அவனோடு நிரம்பவும் அன்னியோன்னியமாகப் பழகி இணைபிரியா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/246&oldid=1252422" இலிருந்து மீள்விக்கப்பட்டது