பக்கம்:மேனகா 2.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழம் நழுவி பாலில் விழுந்தது

247

சாட்சியமின்றி அவசரப்பட்டு நிச்சயிக்காம லிருக்கும்படி கூறி நீதி போதித்து, அவனது எண்ணத்தைப் பணிப்பெண் மாற்றிவிட்டாள். அந்த நிலைமையில், வராகசாமி, தனது மனைவி காணாமற் போனதைப் பற்றி உண்மையான விவரம் எப்போது கிடைக்குமோ வென்றும், அவள் பிரிந்ததைப்பற்றி பெரிதும் வருந்தியும் மிகுந்த ஆவல் கொண்டிருந்தான். அந்த வெள்ளைக்கார மங்கையினிடம் ஆழ்ந்த பிரியமும் பட்சமும் அவனது மனதில் உண்டாகி, அது படிப்படியாக வேர் ஊன்றி விட்டன. அவள் நல்ல உத்தமி யென்றும், வெள்ளைக்கார ஜாதியில் பிறந்தவளானாலும் அருமையான குணம் வாய்ந்த பத்தினிஜாதிப் பெண்ணென்றும் வராகசாமி நினைத்தான். அவளது ஜாஜ்வல்லியமான அழகும் அவனது மனத்தை உருக்கி நெகிழ்வித்தது. ஒரு நிமிஷ நேரம் அவளைக் காணாவிடில் அவனது மனம் சலிக்காது. தான் போஜனம் செய்த காலத்திலும், அவள் தன்னுடன்கூட இல்லாமல் போய் விடுகிறாளே என்று அவன் நினைத்து வருந்தினான். தனது ஆபத்துக் காலத்தில் தன்னைக் காப்பாற்ற வந்த தெய்வப் பெண்ணென்றே அவளை அவன் மதித்தான். அவளில்லாவிடில் தான் அத்தனை நாளைக்குள் வைத்தியசாலையிலேயே மாண்டுபோ யிருக்க வேண்டு மென்று அவன் நினைத்தான். டாக்டர் துரைஸானி, முன்னோர் அதிகாரத்தில், அந்தப் பெண்ணைக் கடிந்து வேறு அறைக்கு அவளை மாற்றுவதாக வெருட்டியபோது வராகசாமி அதைப் பற்றி மிகவும் துன்புற்றதாகச் சொல்லப்பட்ட தல்லவா; அதன் பிறகு அவள் துரைஸானியிடம் போய், அவளது கோபத்தைத் தனித்து அவனுடனிருப்பதற்கு அநுமதி பெற்று வந்தாள். அந்த நாள் முதல் அவர்களது நட்பு நிமிஷத்துக்கு நிமிஷம் கனிந்துகெண்டே வந்தது. கடைசியில் அவர்கள் பங்களாவிற்கு வந்தபோது இணைபிரியாத அந்தரங்க சகாக்களாக ஆயினர். அவளுடன் இருப்பதே அவனுக்குப் பரமபதமாக இருந்தது. அவனுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/248&oldid=1252424" இலிருந்து மீள்விக்கப்பட்டது