பக்கம்:மேனகா 2.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

250

மேனகா

நாட்களில் திருப்பதியில் கலியாணம் நடக்குமாம்; இன்றைக்குச் சம்பந்தி வீட்டாரும் பெண்ணும் வந்து விடுவார்களாம். இதற்காகவே இவ்வளவு அவசரமாக என்னைப் பங்களாவுக்கு இவர்கள் அழைத்துக் கொண்டு வந்தார்களாம் - என்றான்.

அதைக் கேட்ட பணிப்பெண் திடுக்கிட்டு திகைப்பும் வியப்பு:மடைந்தாள். பூரணச்சந்திர பிம்பத்தை மேகம் மறைப்பதைப்போல அவளது முகக்களை மறைந்தது. மனம் கொதித்தெழுந்ததாகத் தோன்றியது. என்றாலும், அவள் தன்னை ஒருவாறு சமாளித்துக் கொண்டவளாய், “உங்க ளுடைய உடம்பு இன்னும் செளக்கியமாக வில்லையே. இதற்குள் உங்களைத் திருப்பதிக்கு எப்படி அழைத்துக் கொண்டு போகிறது? திரும்பவும் உடம்பு கெட்டுப் போகுமே; இந்தக் காரியத்தை இப்போது செய்யலாமா வென்பதை நீங்கள் முதலில் டாக்டர் துரையிடம் யோசனை செய்வது அவசிய மாகத் தோன்றுகிறது. சுவரை வைத்துக் கொண்டல்லவா சித்திரம் எழுத வேண்டும். உங்களுடைய உடம்பைத் தேற்றிக் கொண்டல்லவா கலியாணம் செய்து கொண்ட பின் நீங்கள் சுகமா யிருக்கலாம்” என்றாள்.

வராக:- எனக்குக் கலியாணம் செய்துகொள்ள விருப்ப மிருந்தாலல்லவா, டாக்டர் துரையைக் கேட்கவேண்டும் என்கிற அவசியம் ஏற்படும். நான் இருக்கும் நிலைமை யென்ன! முதல் பெண்டாட்டி காணமற்போய் பதினைந்து நாளாகவில்லை. அவள் உயிரோடிருக்கிறாளோ, மாண்டு போனாளோ வென்பது தெரியவில்லை. அவள் மாண்டு போனதாக வைத்துக் கொண்டாலும், அந்தத் தீட்டுக் கூட இன்னம் கழிந்திருக்காது. தவிர, முதல் பெண்டாட்டியால் எனக்கு நேர்ந்த துன்பமே இன்னம் நீங்காமல், நான் உயிருக்கு மன்றாடும் போது எனக்கு இன்னொரு பெண்டாட்டி வேண்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/251&oldid=1252427" இலிருந்து மீள்விக்கப்பட்டது