பக்கம்:மேனகா 2.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழம் நழுவி பாலில் விழுந்தது

253

முதற் பெண்டாட்டி போன இடத் தெரியவில்லை. பதினைந்து நாளைக்குள் வேறே கலியாணம் செய்து விட்டார்களென்று ஊரார் சிரிக்க மாட்டர்களா?

பணிமகள்:- ஆம்; உண்மையான விஷயம்; அதுவும் தவிர, உங்களுடைய முதல் மனைவி, எவ்விதமான களங்கமும் அடையாமல் திடீரென்று உங்களிடம் வந்து சேருவாளானால், அவளை நீங்கள் வேண்டாமென்று சொல்லுவது தரும மாகுமா? அல்லது இரண்டு பெண்டாட்டிகளை வைத்துக் கொண்டு எமவாதைப் படத்தான் உங்களால் முடியுமா?

வராக:- இத்தனை நாள் கழிந்தபின் அவள் இனிமேலா வரப்போகிறாள். அவள் போனவள் போனவளே! எனக்கும் பெண்டாட்டி இருந்தாளா என்பது சொப்பனமாக அல்லவா போய்விட்டது. அவள் வருவாளென்கிற சந்தேகத்தினால், கலியாணம் வேண்டாமென்று நான் சொல்லவில்லை. அப்படி அவள் வருவாளென்பது எனக்குத் தோன்றவில்லை.

பணிமகள்:- அடுத்த நிமிஷத்தில் என்ன நடக்கப் போகிற தென்பது நமக்குத் தெரியுமா? எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கும் ஈசுவரன் மனது வைத்தால் இந்த அண்டமே ஒரு நொடியில் புரண்டுபோகுமே. உங்கள் மனைவி திரும்பி வருவதுதானா ஒர் அருமையான காரியம்; அவளும் நல்ல பதிவிரதையின் வயிற்றில் பிறந்த உத்தமியா யிருந்து, நீங்களும் நல்லகுணமுடைய மனிதராயிருந்தால், ஈசுவரன் உங்கள் இரண்டு பேரையும் ஒரு க்ஷணநேரத்தில் கூட்டிவைப்பான். எனக்கு எப்போதும் மனிதர் சகாயத்தில் நம்பிக்கையே கிடையாது. ஈசுவரன் எல்லாவற்றையும் நமக்குத் தெரியாமல் நடத்திவைக்கிறா னென்பதே என்னுடைய நம்பிக்கை - என்றாள்.

அப்போது அவர்களிருந்த அறையின் கதவு திடீரென்று திறக்கப்பட்டது. முதலில் சாமாவையர் வந்தார்; பிறகு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/254&oldid=1252430" இலிருந்து மீள்விக்கப்பட்டது