பக்கம்:மேனகா 2.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

254

மேனகா

வரதாச்சாரியாரும், இன்னும் மூன்று மனிதரும் வந்தார்கள். கடைசியில் பெருந்தேவியம்மாள் வாசற்படியில் நாணிக் கோணி நின்று, “அடே வராகசாமி! சம்பந்திகள் வந்துவிட்டார்கள்; உன்னைப் பார்க்க வந்திருக்கிறார்கள்” என்றாள். வெள்ளைக்காரப் பணிப்பெண் திடுக்கிட்டெழுந்து தூரத்தில் மறைந்து நின்றாள்; வராகசாமிக்கருகில் நெருங்கிய சாமாவையர், “வராகசாமி! இதோ இவர்தான் உன்னுடைய மாமனார், மற்றவர்கள் இவருடைய பந்துக்கள். நிச்சய தாம்பூலத்துக்காக வந்திருக்கிறார்கள்” என்றார். அதைக் கேட்ட வராகசாமியின் மனதில் கூரிய அம்பு பாய்ந்ததைப்போல இருந்தது. அவன் கண்களை மூடிக்கொண்டு மயங்கித் தலையணையில் சாய்ந்து விட்டான். சாமாவையர் மேலும் இரண்டொருதரம் கூப்பிட்டு பார்த்தார். அவன் பேசவில்லை. “சரி பையன் அலுப்பாக தூங்குகிறான் போலிருக்கிறது. கொஞ்ச நாழிகை கழித்து வருவோம்” என்று சாமாவையர் மற்றவர்களை அழைத்துக் கொண்டு வெளியில் போய் விட்டார். அந்த வெள்ளைக்காரப் பணிப்பெண் திரும்பவும் வ்ராகசாமியின் கட்டிலண்டை வந்து அவனது மயக்கத்தைத் தெளிவிக்க, அவன் கண்களைத் திறந்து, “போய் விட்டார்களா?” என்றான்; “போய்விட்டார்கள்” என்றாள் பணிமகள்.

வராகசாமி மிகவும் விசனமடைந்தவனாய், “அடுத்த நிமிஷம் என்ன சம்பவிக்குமோ வென்று நீ சந்தேகித்தாயே! இப்போது என்ன சம்பவித்தது பார்த்தாயா? இவர்கள் ஏற்பாடு செய்தபடிதான் காரியம் நடக்கிறது. இந்தக் கலியாணத்தை எப்படி நிறுத்துவதென்பது தெரியவில்லை. நான் சொன்னால், இவர்கள் கேட்காமல் பிடிவாதம் செய்வார்கள். என்ன செய்வதென்பதே தோன்றவில்லை” என்றான்.

அதைக் கேட்ட அப் பெண்மணியும் சிறிது சிந்தனையி லாழ்ந்தவளாய், "இவர்கள் வந்து விட்டதனாலேயே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/255&oldid=1252431" இலிருந்து மீள்விக்கப்பட்டது