பக்கம்:மேனகா 2.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழம் நழுவி பாலில் விழுந்தது

277

நாளைக்கு நிச்சயதாம்பூலம் மாற்றப்போகிறார்கள். சம்பந்தி, புதிய பெண் முதலியோர் வந்திருக்கிறார்கள். உங்களுடைய சம்சாரத்தின் முடிவு இதற்கு முன் தெரியாதிருந்தமையால், கலியாணத்தைத் தடுக்க நினைத்தீர்கள். இப்போதோ மேனகா இறந்து போய்விட்டாள். இனி நீங்கள் எப்படியும் வேறு கலியாணம் செய்து கொண்டே தீரவேண்டும். இவர்கள் எல்லா ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார்கள். இதை நீங்கள ஏன் கெடுக்க வேண்டும்? கலியாணத்தை முடித்துக் கொள்ளுங்கள். இந்த முகூர்த்தத்தில் அதை நடத்த, உங்களுடைய தேகஸ்திதி இடங்கொடுக்காவிட்டால், இன்னும் சில நாட்களுக்குப் பிறகாகிலும், இந்தப் பெண்ணையே கட்டிக் கொள்ளுங்கள்; இந்தப் பெண்ணும் எல்லா விஷயங்களிலும் தகுந்தவளாகவே இருப்பாள். உங்களுடைய சகோதரிமார்கள் நன்றாகப் பார்த்துத்தான் பொறுக்கி யிருப்பார்கள். அவள் லக்ஷப் பிரபுவின் மகளாம். அவளுடைய சொத்து முழுவதும் உங்களுக்கே வரப்போகிறதாம். கலியாணம் செய்துகொண்டு பங்களாவில் சுகமாக இருந்து இன்பம் அநுபவியுங்கள். நீங்கள் இப்படி அபரிமிதமாகத் துயரப்படுவதற்குக் கொஞ்சமும் நியாயம் இல்லை” என்றாள்.

அவள் அவ்வாறு அவனிடம் அந்தரங்கமான அபிமானத்தோடு உருக்கமாகப் பேசினாளெனினும் அவளது சொற்கள், எரியும் நெருப்பில் எண்ணெயை வார்ப்பதைப் போல, அவனது ஆத்திரத்தையும் விசனத்தையும் பெருக்கின என்றாலும், தன்மீது ஆழ்ந்த பிரியத்தைக் கொண்டவளாய், பிரதிபலனைக் கருதாமல் ஒயாக் கவலைக்கொண்டு தனது உயிரைக் காப்பாற்றிவரும் அந்த உத்தமியிடத்தில் சிறிதும் கடுமையாக மொழிய மனமற்றவனாய் அவன் சிறிது தயங்கி ஒரு நிமிஷம் மெளனமா யிருந்த பின், “எத்தனை லட்ச ரூபாய் வந்தாலும், எந்தப் பங்களா வந்தாலும், தெய்வ ரம்பையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/278&oldid=1252454" இலிருந்து மீள்விக்கப்பட்டது