பக்கம்:மேனகா 2.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழம் நழுவி பாலில் விழுந்தது

281


அதைக் கேட்ட அந்தப் பூங்கொடி தனது ஸாகஸங்களை யெல்லாம் உபயோகித்து, “நான் புரளியாகச் சொல்லு வதாகவா நினைத்து விட்டீர்கள்! அப்படி நினைக்க வேண்டாம், நான் சொல்வது சத்தியமான விஷயம்; நான் பிறந்த முதல் இதுவரையில் உங்கள் ஒருவரைத்தான் காதலித்தேன். எத்தனையோ துரை மக்கள் என்னை மணக்க விரும்பினார் களானாலும், நான் அவர்களை மனதிலும் நினைக்கவில்லை. உங்கள் மேலேதான் என் முழுக் காதலும் ஏற்பட்டு விட்டது. ஆனால், வெள்ளைக்காரியாகிய என்னை எப்படி நீங்கள் மணப்பதென்று யோசிக்கலாம். அந்த ஆட்சேபத்தை விலக்குவது அரிதல்ல. என்னுடைய தந்தை பெருத்த உத்தியோகத்தில் இருக்கிறார். நான் அவருக்கு ஒரே பெண். அவருக்கு லட்ச லட்சமாகப் பொருளிருக்கிறது; அவ்வளவு செல்வமும் உங்களுக்கே வந்துவிடும். அவர் சிபார்சு செய்து உங்களுக்கு ஜட்ஜி உத்தியோகம் செய்துவைப்பார். உங்கள் விஷயத்தில் பெருத்த வஞ்சகம் செய்த சகோதரிகளின் முகத்தில் இனி விழிக்கமாட்டேனென்று நீங்களே சொல்லிவிட்டீர்கள். அவர்களைத் தவிர உங்களுக்கு வேறு உறவினர்கள் இல்லையென்றும் சொல்லியிருக்கிறீர்கள். நீங்கள் உடனே கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்து கொள்ளுங்கள்; உடனே நான் உங்களை மணந்து கொள்கிறேன்; உங்களை நான் இந்திர போகத்தில் அமர்த்துகிறேன்; மனிதருக்கு வேறு என்ன வேண்டும்? பெருத்த செல்வம், உன்னதமான உத்தியோகம், இருப்பதற்கு இரமணியமான மாளிகை, இணைபிரியாதிருந்து சுவர்க்கபோக மளிப்பதற்கு அந்தரங்கமான வாஞ்சையுள்ள காதலி; இவற்றைத் தவிர, வேறு எவ்விதமான சுகத்தை நீங்கள் பெறப்போகிறீர்கள்? என்னை மணப்பதால் இத்தனையும் ஒரு நொடியில் உங்களுக்குச் சித்திக்கும். ஏராளமான செல்வத்துடன் நாம் இரதியும் மன்மதனும்போல சகலவிதமான செல்வ போகங்களுடன் காலங் கழிக்கலாம். அப்படியே ஆகட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/282&oldid=1252459" இலிருந்து மீள்விக்கப்பட்டது