பக்கம்:மேனகா 2.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழம் நழுவி பாலில் விழுந்தது

283

இடர்களெல்லாம் வந்தன. கடைசியில் அவள் தன்னுடைய உயிரையே என் பொருட்டு தத்தம் செய்து விட்டாள். என் உயிர்போனாலன்றி இந்தப் பெருத்த விசனம் என் மனதை விட்டு அகலுமா? அருமையான மனைவியை இழந்த துக்கமும், சகோதரிகளான துஷ்ட முண்டைகள் எனக்குச் சகோதரி மார்களாக வந்து வாய்த்த துக்கமும் என் மனதை வாளைப் போல அறுக்க, நான் இரத்தக் கண்ணீர் விடும் சமயத்தில், எனக்கு வேறு கலியாணம் வேண்டுமா? இனி என் ஆயுட் காலத்தில் எந்த நிமிஷத்திலாகிலும் என் மனம் சந்தோஷம் என்பதை அறியுமா? நீயோ மகா பாக்கிய சாலியைப் போலத் தோன்றுகிறாய். உன்னுடைய மேன்மைக்குத் தகுந்தபடி, ஒருபோதும் துன்பத்தையே அடையாதவனும் அதிர்ஷ்டசாலியுமான நல்ல புருஷனை நீ அடைந்து சம்பூரணமான சுகத்தையடைய வேண்டும்; அதுவே என்னுடைய பிரார்த்தனை. நான் உன்மேல் கொண்டது, ஒரு குழந்தை தாயினிடம் வைக்கும் வாஞ்சையேயன்றி வேறுவிதமான ஆசையை நான் உன் விஷயத்தில் கொள்ளவே இல்லை. என்னுடைய நிலைமை முறிந்துபோன பாலின் நிலைமையைப் போலவிருக்கிறது. இனி நான் ஒரு நாளும் சுகப்படப்போகிறதில்லை. என்னைக் குபேர சம்பத்தில் கொண்டுபோய் வைத்தாலும், என் மனம் சந்தோஷப்படப் போகிறதில்லை. இத்தனை நாழிகை மேல் உலகத்தில் தெய்வமாக விளங்கும் என்னுடைய மேனகாவே திரும்பி பூலோகத்துக்கு வந்து என் மனதைத் தேற்றினாலன்றி இந்த விசனம் மாறக்கூடியதல்ல. தயவு செய்து கலியாண விஷயத்தைப் பற்றி இப்போது பேசவேண்டாம். என் மனம் பதறுகிறது” என்று கூறி அவளிடம் நயந்து வேண்டினான்.

அவனது அப்போதைய நிலைமை கல்லையும் கரைக்கத் தக்கதாகிய மிக்க பரிதாபகரமாக இருந்தது. அவனது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/284&oldid=1252461" இலிருந்து மீள்விக்கப்பட்டது