பக்கம்:மேனகா 2.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழம் நழுவி பாலில் விழுந்தது

287

வேண்டுமானாலும் வைதுகொள். பெண்ணைக் கொடுத்ததற்காக இந்த மரியாதைகளை நாங்கள் அடைய வேண்டியது அவசியந்தான். கடைசியாக எங்களுடைய மாப்பிள்ளையை ஒருதரம் பார்த்துவிட்டுப் போகிறோம். அவர் செத்துப் பிழைத்தாரென்று நாங்கள் வைத்தியசாலையில் கேள்விப்பட்டோம் பார்த்துவிட்டுப் போக வேண்டு மென்று வந்தோம்; பார்த்துவிட்டு உடனே போய்விடுகிறோம்” என்று நயமாக மறுமொழி கூறினாள்.

அதற்குள் சாமாவையர், “பெருந்தேவியம்மா! புதிய சம்பந்திகளுக்கெதிரில் சண்டை போடவேண்டாம்; இவர்கள், மாப்பிள்ளையைப் பார்த்துவிட்டுப் போகட்டுமே; அதனால் உனக்கு நஷ்டமென்ன?” என்றார்.

அதைக் கேட்ட பெருந்தேவி, “சரி; அப்படியானால் பார்த்து விட்டுப் போடி, இதோ இருக்கிறான். ஆனால் நீ அவனோடு பேச்சுக் கொடுப்பாயானால், பார்த்துக்கொள்; தலையைச் சிரைத்துக் கழுதை மேல் வைத்து வெளியில் ஒட்டிவிடுவேன்” என்று கூறியவண்ணம் வராகசாமி யிருந்த அறையின் கதவை படே ரென்று திறந்தாள்.

அப்போதே தமது உணர்வைப் பெற்ற வராகசாமியும் மேனகாவும் திடுக்கிட்டுத் தமது ஆலிங்கனத்தைத் தளர்த்தினர். உடனே மேனகா கட்டிலிலிருந்து விரைவில் எழுந்து தனது தொப்பியை எடுத்துத் தலையில் வைத்துக் கொண்டு, வெட்கமும், நாணமும் அடைந்தவளாய் ஒரு மூலையில் ஒதுங்கினாள். அறையின் வாசற்படியில் பெருந்தேவிய்ம்மாள், கோமளம், சாமாவையர், கனகம்மாள், தங்கம்மாள், கிட்டன், வரதாச்சாரியார், இன்னம் அவரது பந்துக்களான ஏழெட்டு ஆண் பெண் பாலர் ஆகிய எல்லோரும் இருந்தனர். நோயாளியாயிருந்த வராகசாமியும், பணிப்பெண்ணான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/288&oldid=1252465" இலிருந்து மீள்விக்கப்பட்டது