பக்கம்:மேனகா 2.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

286

மேனகா

கருங்கடற் பள்ளியிற் கலவி நீங்கிப் போய்ப்
பிரிந்தவர் கூடினாற் பேசலும் வேண்டுமோ?”

என்றபடி அவர்களிருவரும் பேசலும் வேண்டுமோ? இருவர் மனதிலும் கரைகடந்து பொங்கி வழிந்த உவகை வெள்ளத்தில் புதைபட்டு லயித்து அரை நாழிகை வரையில் அவர்கள் அப்படியே கல்லாய்ச் சமைந்திருந்தனர்.

அந்தச் சமயத்தில், அவர்களிருந்த அறைக்கு வெளியில் ஏதோ பெரிய கூக்குரல் உண்டாயிற்று. பெருந்தேவியம்மாள் கோபமாக யாருடனோ உரக்கப் பேசி சண்டை யிடுவதாய்த் தோன்றியது; வரவர அந்த இரைச்சல் அதிகரித்தது. அவர்களிருந்த அறையின் வாசற் படிக்கருகில் நெருங்கி வருவதாகத் தோன்றியது; அந்தக் கூக்குரலில் கனகம்மாளின் குரலும் உண்டாயிற்று.

அப்போது பெருந்தேவியம்மாள், “அடி கனகி! நீ மானமுள்ளவளா யிருந்தால், திரும்பவும் என்னுடைய வீட்டுக்குள் அடி வைப்பாயா? என்னவோ செய்துவிடுவதாகப் பயமுறுத்திவிட்டுப் போனாயே? என்னடி செய்தாய்? கெட்ட கேட்டுக்குக் கொண்டைபோட்ட முண்டாசம்; உன்னுடைய பேத்திதான் நாடகக்காரப் பயலோடு ஒடிப்போய் விட்டாளே! அவளுக்கும் நாடகக்காரனுக்கும் குழந்தை பிறந்திருக்கிறதாம்; உன்னுடைய கொள்ளுப்பேரனுக்கு ஜாதகரணம் நாமகரணம் பண்ணிவைக்கப் போடி, இனிமேலே இங்கே உனக்கு என்ன வேலை? மாப்பிள்ளையை நீ பார்க்காவிட்டால், அவன் செத்துப் போய்விடமாட்டான்; போ வெளியில்; நாங்கள் நிச்சயதாம்பூலம் செய்யப் போகிறோம்;மொட்டை முண்டை யான நீ அபசகுனமாய்க் குறுக்கே வருகிறாயா? எடுதுடைப்பக் கட்டையை” என்றாள். அதைக் கேட்ட கனகம்மாள் பொறுமையோடு, “பெருந்தேவியம்மா! என்னை எவ்வளவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/287&oldid=1252464" இலிருந்து மீள்விக்கப்பட்டது