பக்கம்:மேனகா 2.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூ! கூ! திருடன்! திருடன்!

299

மறைத்துக் கொண்டவராய் வராகசாமியை நோக்கி, “எனக்கு உட்கார நேரமில்லை. வந்த காரியத்தை உடனே முடித்துக் கொண்டு போகவேண்டும்” என்றார்.

உடனே வராகசாமி அந்தரங்க அன்போடு, “அண்ணா! நீங்கள் அனுப்பிய கடிதம் இப்போதுதான் வந்தது. உங்களுக்கு பதில் நாளைய தினம் எழுதலாமென்று நினைத்தேன். என் விஷயத்தில் நீங்கள் செய்த பேருதவிக்கு நான் என்ன பதிலுபகாரம் செய்யப்போகிறேன்! இந்தக் கடிதம் வந்திராவிட்டால், நானும் என்னுடைய சம்சாரமும், மற்றவரும் உயிரை விட்டிருப்போம். எங்களுடைய குடும்பமே சீர்குலைந்து அழிந்துபோயிருக்கும். நீங்கள்தான் ஈசுவரனைப் போல வந்து எங்களை யெல்லாம் காப்பாற்றினீர்கள். உங்களுடைய பெயருக்குத் தகுந்தபடியே நீங்கள் எங்களுடைய விஷயத்தில் அமிர்த சஞ்சீவிபோல வந்து உதவினர்கள்” என்று கூறிய வண்ணம் கண்ணீர் விடுத்தான்.

சஞ்சீவி ஐயர் அதைப்பற்றி எவ்விதமான சலனமும் அடைந்ததாய்க் காட்டாமல் அலட்சியமாக, “நாங்கள் புண்ணியத்துக்கா செய்கிறோம்! சம்பளம் வாங்க வில்லையா! நான் செய்த காரியத்துக்காக சன்மானம் வாங்கவேண்டுமென்று எதிர்பார்க்கவே இல்லை. நீங்கள் அதைப்பற்றி ஏன் கவலைப் படுகிறீர்கள்? எனக்கு நாழிகையாகிறது” என்றார்.

வராகசாமி, “அப்படியானால் உங்களுக்கு என்ன காரியம் ஆகவேண்டும்? இந்தக் கடிதத்தின் சம்பந்தமாகத்தானே நீங்கள் வந்தது?” என்றான்.

சஞ்சீவி ஐயர் புன்னகை செய்து, “இல்லை, இல்லை; நம்முடைய சாமாவையரிடம் வராமல் நான் வேறு யாரிடத்துக்கு வரப்போகிறேன். உங்களிடத்திலெல்லாம் எனக்கு என்ன வேலை இருக்கிறது? வக்கீலும் போலீசாரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/300&oldid=1252476" இலிருந்து மீள்விக்கப்பட்டது