பக்கம்:மேனகா 2.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

300

மேனகா

எப்போதும் எதிர்க்கட்சிகாரர்களல்லவா! நாங்கள் ஒரு குற்றவாளியை நியாய ஸ்தலத்துக்குக் கொண்டுபோய் அவனைத் தண்டிக்கவேண்டு மென்றால், நீங்கள் அவனை விட்டுவிடவேண்டுமென்று எதிர்வாதாடுகிறவர்கள் அல்லவா, உங்களிடம் எனக்கு வேலை இல்லை” என்று வேடிக்கையாகப் பேசியவண்ணம் சாமாவையரது பக்கம் திரும்பி, “ஐயரவாள்! நாங்கள் தங்களுடைய பேட்டிக்காக வந்திருக்கிறோம். தாங்கள் செய்த காரியத்துக்காக துரைத்தனத்தார் தங்களை மிகவும் மெச்சி தங்களுடைய கைக்கு ஒரு மெடல் அனுப்பி யிருக்கிறார்கள். தயவு செய்து கையை நீட்டுங்கள்” என்று கூறிய வண்ணம் ஜெவான்களை நோக்கி சைகை செய்ய, அவர்கள் நால்வரும் சாமாவையரைச் சூழ்ந்து கொண்டனர். ஐயரோ கையும் களவுமாய்ப் பிடிபட்ட கள்ளனைப்போலத் திருட்டு விழி விழித்து, “எதற்காக விலங்கு போடுகிறீர்கள்?” என்று மெதுவாகக் கேட்க, சமயசஞ்சீவி ஐயர், “என்ன ஐயரவாள்! தங்களுக்குத் தெரியாத காரியமுண்டா ? எத்தனையோ திறமையான காரியங்களையெல்லாம் செய்த தாங்கள் இதன் காரணத்தை அறிந்து கொள்ள முடியவில்லையா? தங்களுடைய நண்பரான வராகசாமி ஐயங்காருக்குத் தாங்கள் செய்த காரியம் அற்பமானதா? ஆனால், அதற்காகத் தங்களுக்கு இந்தச் சன்மானம் கிடைக்க வில்லை. அதற்கு வராகசாமி ஐயங்கார் மனது வைத்துச் சன்மானம் செய்ய வேண்டும்” என்று சொல்லிவிட்டு வராகசாமியைப் பார்த்து, “இவர் உங்களுக்குச் செய்ததை மாத்திரந்தானே நீங்கள் அறிவீர்கள்; அதைத் தவிர எவ்வளவோ அருமையான காரியங்களை யெல்லாம் இந்த மகான் செய்திருக்கிறார். இவருடைய சக்தி நரியைப் பரியாக்கின ஈசுவரனுக்குக் கூட வராது. இவர் அன்னியர் வீட்டு மனிதரை விற்பதில் மாத்திரம் தேர்ந்தவரென்று நினைத்தீர்களா? இல்லை இல்லை? அன்னியருடைய பங்களா முதலியவற்றையும் சொந்தக்காரருக்குத் தெரியாமல் விக்கிரயம் செய்வதிலும் இவர் மகா சமர்த்தர். பிச்சைக்கார சாயப்புவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/301&oldid=1252477" இலிருந்து மீள்விக்கப்பட்டது