பக்கம்:மேனகா 2.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூ! கூ! திருடன்! திருடன்!

317

விஷயங்களை சொன்னேன். எஜமானர் திடீரென்று எழுந்து என்னை அப்படியே பிடித்து அணைத்துக் கொண்டு என்னைப் பலவாறு புகழ்ந்தார்; பட்டணத்துக்கு உடனே பட்சியைப் போல பறந்து வந்துவிட நினைத்துத் துடித்தார். ஆனால், இன்னம் இரண்டு நாளைக்கு முன் வைத்தியசாலையை விட்டுப் போகக்கூடாதென்று டாக்டர் சொல்லித் தடுத்து விட்டார். ஆகையால், எஜமானர் இன்று காலையில் ஆளை அனுப்பச் சொன்னார்கள்; அதற்குள் இன்று காலையில் தஞ்சையிலிருந்து எஜமானருக்கு ஒரு பெருத்த சந்தோஷ சமாச்சாரம் வந்தது. துரைத்தனத்தார் பெரிய கலெக்டர்துரைக்கு ஆறுமாச காலத்துக்கு ரஜா கொடுத்து விட்டு, அவருக்குப் பதிலாக நம்முடைய எஜமானரையே தஞ்சாவூர் ஜில்லாவுக்கு பெரிய கலெக்டராக மாதம் முவ்வாயிரம் சம்பளத்தில் நியமித்திருக்கிறார்களென்றும், மறு நாளே வந்து வேலையை ஒப்புக்கொள்ளும்படியாயும் அதனால் தெரியவந்தது. அதைக் கேட்டவுடனே நான் அடைந்த குதூகலத்தையும் பிரம்மாநந்தத் தையும் சொல்லவும் கூடுமா! நான் அப்படியே எழுந்து ஆநந்தக்கூத்தாடி ஒரு நாழிகை வரையில் சந்தோஷத்தினால் பூரித்துப் பொங்கிப்போய்விட்டேன்; தெய்வங்களுக்கெல்லாம் வேண்டுதல் செய்துகொண்டு வாயாரத் துதித்தேன்; எஜமானரிடம் ஆயிரம் தடவை சொல்லிச் சொல்லி மகிழ்வுண்டாக்கினேன். ஆனால் எஜமானர் அவ்வளவு சந்தோஷ மடைந்தவராகத் தோன்றவில்லை. எஜமானி யம்மாள், குழந்தை மேனகா, மாப்பிள்ளை ஆகிய மூவர் க்ஷேமத்தைப் பற்றி ஒரு செய்தியும் தெரியாமலிருப்பதால், எஜமானருடைய மனசு பட்டணத்திலேயே நாட்டமுடையதா யிருந்தது; உங்களுக்கு உடனே தந்தி யனுப்ப நினைத்தோம்; ஆனால் விலாசம் நிச்சயமாகத் தெரியவில்லை. ஆகையால், இந்த ஆளையே அனுப்பினோம். அவ்விடத்து விஷயங்களை அறிய வேண்டு மென்று எங்களுடைய மனம் துடிப்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/318&oldid=1252494" இலிருந்து மீள்விக்கப்பட்டது