பக்கம்:மேனகா 2.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

316

மேனகா

வித்ததாகவும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கூறினார். அந்த விவரத்தைக் கேட்கவே விவரிக்க முடியாமல் மனம் பதறியது. மேல் நடந்ததை அறிய ஆவல்கொண்டு நான் கேட்க, போலீஸார் உடனே அவரை வைத்தியசாலைக்கு அனுப்பி விட்டதாகவும், அங்கே அவர் சிகிச்சையில் இருப்பதாகவும் கேள்விப்பட்டு, உடனே நான் வைத்தியசாலைக்கு ஒடினேன்; என்னைக் கண்ட எஜமானர், “நீ யாரடா? ஏன் நிற்கிறாய்? போ அப்பால்” என்று முன்பின் தெரியாதவனைப் போலப் பேசிப் பிதற்றி என்மீது எச்சிலை உமிழ்ந்தார்; எல்லோரையும் அடிக்கவும், உதைக்கவும் ஓடினார்; வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டார். நானும் அங்கிருந்த சிப்பந்திகளும் எதற்கும் மனந்தளர்வடையாமல் இரவு பகலாய் அவரை விட்டு அகலாமல் இருந்தோம். டாக்டர் மிகவும் தேர்ந்த நிபுணராதலால், அவர் அதற்குத் தக்க மருந்துகளை உபயோகித்து மிகவும் சிரத்தையோடும் அன்போடும் சிகிச்சை செய்து வந்தார். நான் கொண்டுபோயிருந்த பணத்திலும் ஐம்பது ரூபாய் அவரிடம் கொடுத்து நன்றாகக் கவனித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொண்டேன். அவரும் அவ்வாறே நன்கு கவனித்துப் பார்த்து வந்தார். என்னுடைய உயிரும் நினைவும் எஜமானரிடத்தில் பாதியும் எஜமானியம்மாளிடத்தில் பாதியுமாக தடுமாறிக் கொண்டிருந்தன; ஆனால் பட்டணத்தில் ஆபரேஷன் முடிந்திருக்கு மென்றும், எஜமானியம்மாள் செளக்கிய மடைந்திருப்பார்களென்றும் நினைத்து தைரியங் கொண்டு இத்தனை நாள் நான் எஜமானரோடு கூட இருந்தேன். உங்களுக்கு ஒரு கடிதம் எழுதக்கூட இதுவரையில் எனக்குச் சாவகாசம் கிடைக்காமல் போயிற்று; எஜமானருடைய உணர்வு படிப்படியாகத் தெளிவடைந்து வந்தது. நேற்றிரவு எஜமானர் முற்றிலும் தெளிவடைந்து நமது வரலாற்றை யெல்லாம் கேட்டார். அதைக் கண்டு நான் ஆநந்தப்பரவச மடைந்தவனாய் பட்டணத்திலும் தஞ்சாவூரிலும் நடந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/317&oldid=1252493" இலிருந்து மீள்விக்கப்பட்டது