பக்கம்:மேனகா 2.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூ! கூ! திருடன்! திருடன்!

315


கனகம்மாள்:- என்ன ஆச்சரியம்! இத்தனையும் அந்தத் தாந்தோனிராயன் செய்த காரியமா! அடே சதிகாரா! உனக்கு என் பிள்ளை என்ன தீங்கையடா செய்தான்! எங்களைக்கெடுத்து விட்டு நீ எப்படியாவது பெண்டுபிள்ளைகளோடு சுகமாய் வாழப்பா! நாங்கள் கெட்டால் கெட்டுப் போகிறோம்- என்று மிகவும் வருந்திக் கூறினாள்.

அதற்குள் தங்கம்மாள் மேனகாவின் முகத்தில் துளித்த வியர்வை முத்துக்களை அன்போடு துடைத்துவிட்டு, “அம்மா! மேலே படி; உன்னுடைய அப்பாவைக் கண்டு பிடித்தானோ இல்லையோ அது தெரியவில்லையே; சீக்கிரமாகப் படி” என்று ஆவலோடு கூறி அவளை ஊக்கினாள். மேனகா மேலும் படிக்கிறாள்:

“மறுநாள் விடியற்காலம் நான் செங்கற்பட்டுக்கு வந்து சேர்ந்து, நேராகப் போலீஸ் ஸ்டேஷனுக்குப்போய், இன்ஸ்பெக்டரைக் கண்டு, எஜமானரைப் பற்றி விசாரித்தேன். நான் அங்கிருந்து தஞ்சாவூருக்குப் போன மறுநாளே எஜமானர் அகப்பட்டுவிட்டாரென்று அவர் தெரிவித்தார். நான் அதைக் கேட்டு கரைகடந்த சந்தோஷ மடைந்தேனாயினும், அவர் சொன்ன மற்ற விவரங்களைக் கேட்க, என் மனம் பதறியது. என்னவென்றால், எஜமானர் பணத்தை இழந்ததற்கு மறுநாள் காலையில் பைத்தியம் பிடித்தவரைப் போலப் பிதற்றிக்கொண்டு செங்கற்பட்டுக்கு அருகிலிருக்கும் பாலாற்றங்கரைக்குப் போனதாயும், மிகவும் ஆழமாகப் போய்க்கொண்டிருந்த தண்ணீரில் அவர் அலட்சியமாக இறங்கியதாயும், உடனே தண்ணீரால் இழுபட்டு நிலைதப்பி ஆற்றோடு புரண்டு கொண்டு போனதாயும், அங்கிருந்த வழிப்போக்கர்களிற் சிலர் அவரை உடனே எடுத்துக் கரை யேற்றி மூர்ச்சைதெளிவித்து அவர் யாரென்று கேட்டதாயும், அவர் மேன்மேலும் பிதற்றியதாயும், அவர்கள் உடனே அவரைப் போலீஸ் ஸ்டேஷனில் கொணர்ந்து ஒப்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/316&oldid=1252492" இலிருந்து மீள்விக்கப்பட்டது