பக்கம்:மேனகா 2.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூ! கூ! திருடன்! திருடன்!

319

கீழே ஊன்றினால், முழங்காலில் இன்னமும் வலி உண்டாகிறதே. இந்த நிலைமையில் அவ்வளவு தூரம் பிரயாணம் செய்யலாமா? டாக்டர் துரைஸானியைத் கேட்டுக் கொண்டு நாளைக்காவது மறுநாளாவது போகலாம். உங்களுக்கும் அம்மாவுக்கும் உடம்பு செளக்கியமாய் விட்ட தென்று ஒரு தந்தியனுப்புவோம்; அதுபோனால் அவர்களுக்கு ஆறுதலா யிருக்கும்” என்றாள். அதைக்கேட்ட வராகசாமி “இல்லை இல்லை; முழங்காலில் எனக்கு அவ்வளவு வலி உண்டாக வில்லை; இங்கிருந்து வாடகை மோட்டார் வண்டி அமர்த்திக் கொண்டு ரயிலுக்குப் போவோம். என்னை மெதுவாக ரயிலில் கொண்டுபோய் விட்டு விடுங்கள். நாம் எல்லோரும் முதல் வகுப்பு வண்டியில் ஏறிப் போவோம்; இந்தப் பிரயாணம் கொஞ்சமும் கஷ்டமாயிருக்குமென்பது தோன்றவில்லை. எனக்கு, மாமாவை உடனே பார்க்கவேண்டு மென்னும் ஆவல் துடிக்கிறது; இங்கே இருப்பதும் நெருப்பின் மேலிருப்பதைப்போல இருக்கிறது; வைத்தியத்தில் கைதேர்ந்த பெரிய டாக்டர் துரைஸானியாகிய நீயே என்னோடு கூட வரும் போது, எனக்கு என்ன கெடுதல் உண்டாகப் போகிறது. உடனே போவதே சரி” என்று மகிழ்ச்சியோடும் நயமாகவும் வற்புறுத்தியும் கூறினான்.

அதைக் கேட்ட மேனகா புன்னகை பூத்த முகத்தோடு, “அப்படியானால் தங்கள் சித்தம் எங்கள் பாக்கியம், தங்களுடைய உத்தரவுக்குமேல் இனி அப்பீல் ஏது? இங்கு மில்லை அங்குமில்லை; பாட்டீ நம்முடைய கிட்டன் எங்கே காணோமே?” எனறாள்.

அதைக் கேட்ட கனகம்மாள், “அவன் முன் கோபி, மகா முரடன்; இந்தக் கலகத்தில், அவன் ஏதாவது முரட்டுத்தனமான காரியம் செயது விடப்போகிறானே என்று பயந்து நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/320&oldid=1252496" இலிருந்து மீள்விக்கப்பட்டது