பக்கம்:மேனகா 2.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்டு முதல்

333

இரக்கமும், பூத தயையும் எவர்கள் காட்டுகிறார்களோ அவர்களே தெய்வங்களைப் போன்றவர்கள்;அவர்களே உறவினர்; அவர்களே நண்பர்கள் அவர்களே தாய் தந்தை சகோதரிகள்; அவர்களே உண்மையான விவேகிகள். என்னோடு கூடப்பிறந்த சகோதரி என் விஷயத்தில் மகா கொடியவளாக மாறிப் போனாள். யாரோ ஒரு மகம்மதியப் பெண் வேறு மதத்தினளான உன் விஷயத்தில் கொண்டுள்ள கரைகடந்த அன்பும் சகோதரி வாஞ்சையும் எப்படி இருக்கின்றன பார்த்தாயா? எனக்கு வாய்த்த சகோதரியைக் காட்டிலும் உனக்கு வாய்த்த சகோதரியே இணையற்றவள்; எந்த மதத்தினராலும் தெய்வமாக வைத்து வணங்கத் தக்கவள். நீ எப்போதும் அதிர்ஷ்டசாலிதான்!” என்று பெருத்த மகிழ்வோடு கூறி, அவளைக் கரைகடந்த பிரேமையோடு அணைத்துக் கொண்டான்; அவள் ஆநந்த பரவச மடைந்தவளாய், “தடையில்லாமல் நான் அதிர்ஷ்டசாலிதான் இப்பேர்ப்பட்ட புருஷ உத்தமரை நாதனாக அடைந்ததை விட நான் அடையக்கூடிய அதிர்ஷ்டம் வேறு என்ன இருக்கிறது” என்று கூறி மனங் கொள்ளா வாத்சல்யத்தோடு வராகசாமியை அனைத்து முத்தமிட்டு ஸரச பல்லாபம் புரியத் தொடங்கினாள்.


சுபம்!!சுபம்!!சுபம்!!


நிறைந்தது
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/336&oldid=1252791" இலிருந்து மீள்விக்கப்பட்டது