பக்கம்:மேனகா 2.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

336

மேனகா


நற்சாட்சிப் பத்திரம்

பெருமை சான்ற வடுவூர் - கே. துரைசாமி ஐயங்கார் அவர்கட்கு

நெஞ்சுகந்த வந்தனம் க்ஷேமோபரி

“தோன்றில் புகழொடு தோன்றுக; அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று”
கற்றோரிற் சிரோரத்தினம் போன்றோரே!

என, ஆன்றோரில் சிறப்புவாய்ந்துள்ள நாயனார் வாக்குக் கிணங்க, புகழுடம்பை எடுத்துள்ளாரில் நீவிர் ஒருவர். என்னெனில், சலமிகு புவியிலுள்ள மக்கள் நலவழியில் பிரவேசித்து நற்கதி யடைய கல்வியில் வல்லோர் பல்லோரிடம் சென்று கேள்வி முயன்று ஒழுக; இக்கலி காலக் கொடுமையின் மிகுதியால் தவறுற்ற எம்போலியர்கள், நீதி பக்தி ஞானம் முதலியவை அடைய, கைம்மாறு கருதாது மிக்க ஆர்வத்துடனும் முயற்சியுடனும் தங்களால் வெளிவரும் நாவல்களில் தளிர் விட்டு வளரும் திகம்பர சாமியார் என்னும் நாவலின் பக்கம் உற்றாலும் தொட்டாலும் பார்த்தாலும் வாசித்தாலும் காந்தங் கண்ட இரும்புபோல் மனதை விட்டு அகலாதென்பது திண்ணம். நாவல் வல்லோர் பலர் வெளியிட்டுள்ள பல்லாயிரம் நாவலுள் தங்களால் வெளிவந்த இந் நாவல் நடுநாயகமென உரைக்கத்தக்க சிறப்பு வாய்ந்துள்ளது. கல்வி கரையில், கற்பவர் நாட்சில, மெல்ல நினைக்கில் பிணிபல. ஆதலின், பல நாவலுள் ஆராயப்பெற்ற மேன்மை வாய்ந்துள்ளது இதுவேயென யாவரும் கற்கத்தக்கது. இந்நூலை வாசிப்போருக்கு இதிலுள்ள விஷயங்கள் மனத்தை விட்டு அகலென்றாலும் அகலா. “ஒருமைக்கண் தான் கற்ற கல்வி எழுமைக்கும் ஏமாப்புடைத்து” என்ற வாக்கியம் மெய்யென நிரூபிக்க, இந்நூல் ஆராய்ந்துள்ளாரே தெள்ளிதி லறிவர். ஆதலின், செய்யாமற் செய்த இப்பேருதவிக்கு யாம் அளிக்கத் தக்க கைம்மாறு இவனில்லை என யாம் அறிந்தும், நாடொப்பன செய் என்ற வாக்குக் கிணங்க, இச் சங்கத்தார் இந் நற்சாக்ஷிப் பத்திரம் அளிக்கலா னோம். கல்விமான்களனைவரும் இதுபோன்ற நாவல்களை வாசித்துக் கொண்டாடி மகிழ்வுற்று நாவலாசிரியர் உற்சாகமும் மகிழ்வையும் அடையுமாறு, தக்க பயனளிப்பார்களெனக் கேட்டுக் கொள்ளுகின்றனம்.


மணப்பாறை (Sd) K.N.NARAYANASWAMY PILLAI

18.1.1921 காரியதரிசி, திராவிட

சங்கம்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/337&oldid=1252797" இலிருந்து மீள்விக்கப்பட்டது